சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இளைஞருக்கு 22 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே 8 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றவாளி சண்முகவேலுவுக்கு 22 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் ரூ.12 ஆயிரம் அபராதமும் புதுக்கோட்டை நீதிமன்றம் விதித்துள்ளது.
கடந்த 2022 ஆம் ஆண்டு நடந்த இந்த சம்பவத்தில் சிறுமி மீது பாலியல் வன்கொடுமை செய்ததாக சண்முகவேலு மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றது.
வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து, அவருக்கு 22 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் ரூ.12 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
