tamilnadu

img

ஏழைகளின் வீடுகளை இடித்து அபகரிக்க கும்பல் முயற்சி

புதுக்கோட்டை, செப்.2- புதுக்கோட்டை மாவட்டம் திரு மயம் அருகே அரசுப் புறம்போக்கில் கடந்த 25 ஆண்டுகளாக குடியிருந்து வரும் ஏழைகளை அப்புறப்படுத்தி விட்டு ரியல் எஸ்டேட் கும்பல் ஆக்கிர மிக்கும் முயற்சிக்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி கடும் கண்டம் தெரிவித்துள்ளது.  இதுகுறித்து கட்சியின் அரிமளம் ஒன்றியச் செயலாளர் ஜி.நாகராஜன் தெரிவித்துள்ளது: திருமயம் தாலுகா அரசநாயகி புரத்தில் அரசு புறம்போக்கு நிலத்தில்  கடந்த 25 ஆண்டுகளாக 35 ஏழை குடும்பங்கள் வீடு கட்டி குடியிருந்து வருகின்றனர். அரசுப் புறம்போக்கு இடத்தில் கட்டப்பட்ட எளிய மக்களின் வீடுகளை இடித்து தள்ளி அந்த இடங்க ளில் ரியல்எஸ்டேட் தொழில் செய்வ தற்கு ஒரு கும்பல் முயற்சித்து வருகின்ற னர். சிலரது வீடுகளையும் அந்தக் கும் பல் இடித்து தரைமட்டமாக்கியுள்ளது. இந்நிலையில், பாதிக்கப்பட்ட பகுதி களை பார்வையிட்டபோது அந்த மக்க ளையும் சந்தித்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின்  மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.சங்கர், ஒன்றியச் செய லாளர் ஜி.நாகராஜன், விவசாயத் தொழி லாளர் சங்க ஒன்றியச் செயலாளர் க. அடைக்கப்பன் ஆகியோர் திங்கள்கிழ மையன்று ஆறுதல் கூறினோம். மேலும், அரசநாயகிபுரம் மக்களை வெளியேற்றுவதற்கோ, அவர்களின் வீடுகளை இடிப்பதற்கோ மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒருபோதும் அனு மதிக்காது. பாதிக்கப்பட்ட மக்களைத் திரட்டி இதுகுறித்து விரைவில் போராட் டம் நடத்தவும் திட்டமிட்டுள்ளோம் என வும் தெரிவித்துள்ளார்.