tamilnadu

புதுக்கோட்டை முக்கிய செய்திகள்

நுண்ணீர் பாசனத்திற்கு மானியம்
புதுக்கோட்டை, ஆக.5-  தமிழகத்தில் சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியமும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானிய மும் வழங்கப்படுகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் இத்திட்டம் நடப்பு நிதியாண்டில் வேளாண் துறை மூலம் 6,293 எக்டருக்கு ரூ.28.86 கோடி நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில் பயன் பெற விரும்பும் விவசாயிகள், உரிய ஆவணங்களுடன் தாங்க ளாகவே இணையதளத்தில் பதிந்து கொள்ளலாம் அல்லது வட்டார வேளாண் உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகி பதியலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாலியல் வழக்கில் முதியவருக்கு சிறை 
புதுக்கோட்டை, ஆக.5-  புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி கலிபுல்லா நகரை சேர்ந்தவர் அசரப்அலி (68). இவர் 7 வயது சிறுமியை கடந்த 3-9-2018-ம் ஆண்டு பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார். இது குறித்து சிறுமியின் தாயார் ஆலங்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதன் பேரில் போலீசார் போஸ்கோ சட்டத்தின் கீழ் அசரப்அலி மீது வழக்குப்பதிவு செய்து அவரை சிறை யில் அடைத்தனர்.  இந்த வழக்கு புதுக்கோட்டையில் உள்ள மகளிர் நீதி மன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ராஜலெட்சுமி சனிக்கிழமையன்று தீர்ப்பு கூறி னார். அப்போது, 7 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த அசரப்பலிக்கு வாழ்நாள் சிறை தண்டனையும், ரூ.ஆயிரம் அபராதமும், அபராத தொகையை கட்ட தவறி னால் மேலும் 6 மாத சிறை தண்டனை விதித்தும், மேலும் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு நஷ்ட ஈடாக ரூ.7 லட்சம் அசரப்பலி வழங்க வேண்டும் என தீர்ப்பு கூறி னார்.