tamilnadu

img

கொத்தங்குடியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிதியளிப்பு நிகழ்ச்சி

தரங்கம்பாடி வட்டம் கொத்தங்குடியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிதியளிப்பு நிகழ்ச்சி கிளை செயலாளர் என்.சந்திரமோகன் தலைமையில் நடைபெற்றது. கிளை உறுப்பினர்கள் ஒரு நாளில் வசூல் செய்த நிதியை வட்டச் செயலாளர் பி.சீனிவாசன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.துரைராஜ் ஆகியோரிடம் வட்டக்குழு உறுப்பினர் பஷீர் அகமது வழங்கினார். மூத்த உறுப்பினர் எம்.கண்ணையன் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.