புதுக்கோட்டை: புதுக்கோட்டை மின்பகிர்மான மேற்பார்வை பொறியாளர் செந்தில்குமார் வெளி யிட்டு உள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- மின்வாரியத்தில் கேங்மேன் பதவிக்கு பணிய மர்த்த 1,628 பேருக்கு சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் உடல்தகுதி தேர்வு இன்று (திங்கட்கிழமை) முதல் வருகிற 10-ந் தேதி வரை மின் வாரியத்தில் “கேங்மேன் பயிற்சி” புதுக்கோட்டை சிப்காட் இண்டஸ்ட்ரியல் எஸ்டேட் துணை மின் நிலைய வளாகத்தில் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. இப்பணியிடத்திற்கு ஏற்கனவே இணையதளத்தில் விண்ணப்பித்தவர்களுக்கு மட்டும் மின்னஞ்சல் வாயிலாக அனுமதி சீட்டு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. மின்னஞ்சலில் பெறப்பட்ட அனுமதி சீட்டு மற்றும் சரிபார்ப்பு பட்டியலுடன் அவர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட நாள் மற்றும் நேரத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் உடல் தகுதி தேர்வில் கலந்து கொள்ள வேண்டும். விண்ணப்பதாரர்கள் தங்களது புகைப்பட அடையாள அட்டை, பள்ளி இறுதி சான்றிதழ் அல்லது இறுதியாக படித்த கல்வி நிறுவனத்தில் இருந்து பெறப்பட்ட கல்வி சான்றிதழ் மற்றும் 5-ம் வகுப்பு, 8-ம் வகுப்பு அல்லது எஸ்.எஸ்.எல்.சி இவற்றில் ஏதாவது ஒரு மதிப்பெண் பட்டியல், சாதி சான்றிதழ், வேலைவாய்ப்பு பதிவு அட்டை மற்றும் இறுதியாக படித்த கல்வி நிறுவனத்தில் பெறப்பட்ட நன்னடத்தை சான்று மற்றும் தனிப்பட்ட முறையில் தெரிந்த அதிகாரம் பெற்ற அலுவலரிடம் இருந்து கடந்த நவம்பர் மாதம் 1-ந் தேதிக்கு பிறகு பெறப்பட்ட சான்று ஆகியவற்றின் அசல் மற்றும் சான்றொப்பமிடப்பட்ட நகலுடன் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.