ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள அரசு மருத்துவமனையில் உயிரிழந்த பச்சிளம் குழந்தைகளின் எண்ணிக்கை 107 ஆக அதிகரித்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் கோடாவில் உள்ள ஜேகே லான் அரசு மருத்துவமனையில் கடந்த மாதம் 23,24-ஆம் தேதிகளில் 10 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து, கடந்த டிசம்பர் மாதத்தில் மட்டும் 91 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக அரசு தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று சனிக்கிழமை வரை 107 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில், இது குறித்து ஆய்வு கொள்ள மருத்துவக் குழுவினர் இன்று ஜேகே லான் அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். மேலும், மருத்துவர்கள் அளித்த சிகிச்சையில் எந்த தவறும் இல்லை என்று மருத்துவ குழுவினர் தெரிவித்துள்ளனர்.