tamilnadu

img

பெட்ரோல், டீசல் விலை தொடர் விலையேற்றம்

சென்னை,ஜன.4-  பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை நிலவரத்தைக் காரணம் காட்டி  இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் நிர்ணயித்து வருகின்றன. எண்ணெய் நிறுவனங்கள் சனிக்கிழமையன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னையில் பெட்ரோல் விலை 11 காசு அதிகரித்து , ஒரு லிட்டர் ரூ.78.39  ஆகவும், டீசல் விலை 16 காசுகள் அதிகரித்து, ஒரு லிட்டர் ரூ.72.28 ஆகவும் உள்ளது.   கடந்த மூன்று தினங்களில் பெட்ரோல் விலை சுமார் 27 காசுகளும், டீசல் விலை 42 காசுகளும் உயர்ந்துள்ளன.  ஈரான் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலால்,  மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம்  அதிகரித்துள்ளது. இதனால், கச்சா எண்ணெய் விலை மேலும் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.