districts

img

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

திருச்சிராப்பள்ளி, ஏப்.2 - 4 மாநிலத் தேர்தல் நிறைவடைந்த நிலையில் ஒன்றிய ஆளும் பாஜக அரசு பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு  விலையை நாள்தோறும் உயர்த்தி வரு வதை கண்டித்தும், விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும் என வலியு றுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  சார்பில் சனிக்கிழமை  நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதையொட்டி சிபிஎம் திருச்சி மாநகர் மாவட்டக்குழு சார்பில் 50 இடங் களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மலைக்கோட்டை பகுதிக்குழு சார்பில் இ.பி.ரோட்டில் உள்ள பெட்ரோல் பங்க்  முன்பு மலைக்கோட்டை பகுதி செயலா ளர் ராமர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநகர் மாவட்ட செயலா ளர் ராஜா, மாவட்டக்குழு உறுப்பினர் அன்வர், சின்னதுரை ஆகியோர் கண்டன உரையாற்றினர்.  கரூர் பைபாஸ் ரோட்டில் உள்ள பெட் ரோல் பங்க் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு பகுதிக்குழு உறுப்பினர் மணிகண்டன் தலைமை வகித்தார். மத்திய கட்டுப்பாட்டுக் குழு உறுப்பி னர் ஸ்ரீதர், மாவட்ட செயற்குழு உறுப்பி னர் ரெங்கராஜன் ஆகியோர் கண்டன  உரையாற்றினர். புழைய பால்பண்ணை பெட்ரோல் பங்க் முன்பு, ஜங்சன் பகுதி  சார்பில் தில்லைநகர் 10 ஆவது கிராஸ், கண்டோன்மெண்ட் பகுதியில் ஆட்டோ எல்பிஜி கேஸ் சென்டர், மத்திய  பேருந்து நிலையம், அரிஸ்டோ ரவுண் டானா அருகில் உள்ள பெட்ரோல் பங்க்கு கள் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  ஆர்ப்பாட்டத்திற்கு அப்துல்கயூம், கணேசன், தேவநாயகம் தலைமை வகித்தனர். பகுதிசெயலாளர் ரபீக்அக மது, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரேணுகா ஆகியோர் கண்டன உரை யாற்றினர்.  பொன்மலை பகுதிக்குழு சார்பில் டிவிஎஸ் டோல்கேட் மீனாட்சி பெட்ரோல் பங்க், அந்தநல்லூர் ஒன்றியம் கம்பரசம் பேட்டை பெட்ரோல் பங்க் முன்பு நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு பகுதிச் செய லாளர் விஜயேந்திரன் தலைமை வகித் தார். மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் வெற்றிச்செல்வன், கார்த்திகே யன் ஆகியோர் கண்டன உரையாற்றி னர். பகுதிக்குழு உறுப்பினர்கள், மாண வர் சங்க மாவட்ட செயலாளர் மோகன் குமார் உள்பட பலர் கலந்து கொண்ட னர். அபிஷேகபுரம், ஸ்ரீரங்கம் பகுதிக்குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றன. 

பாபநாசம்

பாபநாசம் அய்யம்பேட்டை பேருந்து நிழற்குடை அருகில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஷேக் அலாவு தின் தலைமை வகித்தார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் சிவகுரு பேசி னார். ஒன்றியக் குழு, நகரக் குழு உறுப்பி னர்கள் கலந்து கொண்டனர்.