திங்கள், ஜனவரி 18, 2021

tamilnadu

img

கொரோனா இறப்பைப் பற்றி கவலையில்லை : பீகார் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாகிறார் அமித்ஷா...

பாட்னா:
பீகார் மாநிலத்தில் நிதிஷ்குமார்தலைமையில் ஐக்கிய ஜனதா தளம்- பாஜக கூட்டணி ஆட்சியில் இருக்கிறது. சட்டப்பேரவையின் பதவிக் காலம் இந்தாண்டு இறுதியில் முடிவடைவதால், பீகார் மாநிலத்துக்கு அக்டோபர் - நவம்பர் மாதங்களில் தேர்தல் நடத்தப்பட்டாக வேண்டும்.ஆனால், கொரோனா தொற்றுப் பரவால் காரணமாக தேர்தல் நடைபெறுவதற்கு வாய்ப்பிருக்குமா? என்ற சந்தேகம் நிலவி வருகிறது.இந்நிலையில், மத்திய உள் துறை அமைச்சர் அமித்ஷா, பீகார்சட்டப்பேரவைத் தேர்தலுக்கு, மூன்று மாதங்கள் முன்னதாக ஜூனிலேயே பிரச்சாரத்திற்கு தயாராகி விட்டார். பீகார் மாநிலத்தில் ஜூன் 9அன்று ஆன்லைன் மூலம் அமித்ஷாபிரச்சாரத்தைத் துவங்க உள்ளதாகபாஜக தலைமை அறிவித் துள்ளது.

தொகுதிக்கு 1 லட்சம் பேர் என்றவகையில், பீகாரில் உள்ள 243 தொகுதிகளில் உள்ள மக்களிடமும் வீடியோ கான்பரன்சிங் மூலம் அமித்ஷா பிரச்சார உரை நிகழ்த்த உள்ளதாக பீகார் மாநில பாஜக தலைவர் சஞ்சய் ஜெய்சுவால் கூறியிருக்கிறார்.நாட்டில் கொரோனோ தொற்று,இரட்டிப்பு வேகத்தில் பரவிக் கொண்டிருக்கிறது. இறப்பு விகிதம் உயர்ந்து கொண்டே செல்கிறது. மறுபுறத்தில் தொழில் முடக்கம், வேலையின்மை காரணமாக வறுமையும் அதிகரித்து வருகிறது. மத்தியில் ஆளும்கட்சி என்ற வகையில், இப்பிரச்சனைகளில் கவனம்செலுத்த வேண்டிய பொறுப்பு பாஜகவுக்கும் அதன் தலைவர் களுக்கும் உள்ளது. ஆனால், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோருக்கு அதுபற்றிய அக் கறை எதுவும் இல்லை.இந்நிலையில், அமித்ஷாவும் தேர்தல் பிரச்சாரத்திற்கு கிளம்பிவிட்டது, விமர்சனத்திற்கு உள்ளாகிஇருக்கிறது.

;