பலுசேரி:
மோடகல்லூரியில் உள்ள மலபார் மருத்துவக் கல்லூரியில் கோவிட் நோயாளியை பாலியல் வன்கொடுமை செய்ததற்காக பாஜக பிரமுகர் கைது செய்யப்பட்டார். பேராம்பிரா நீதிமன்றம் அஸ்வின் கிருஷ்ணா என்கிற அந்த நபரை சிறையில் அடைக்க உத்தரவிட்டது.மருத்துவமனை ஊழியர்கள் அணியும்பிபிஇ கிட் அணிந்திருந்த அஸ்வின், கோவிட் நோயாளியான பெண்ணை மருத்துவர்அழைப்பதாக கூறி வார்டிலிருந்து அழைத்துச் சென்றுள்ளார்.ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் வைத்து அவரை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கினார். அஸ்வின் கிருஷ்ணா பாஜகவின் தீவிர உறுப்பினர் - சமூக ஊடக ஆர்வலர் ஆவார். இந்த வழக்கை அதோலி காவல் ஆய்வாளர் கே.பி. சுனில் குமார் விசாரித்து வருகிறார்.