tamilnadu

img

சாஃப்ட்டர் பள்ளியின் கழிவறை சுவர் இடிந்து விபத்து: பலி எண்ணிக்கை 3 ஆக உயர்வு

நெல்லையில் சாஃப்ட்டர் பள்ளியின் கழிவறை கட்டிடம் இடிந்து விழுந்ததில் 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
நெல்லை சந்திப்பில்  சாஃப்ட்டர்பள்ளியில் காலை 11 மணியளவில் வழக்கம்போல் இடைவேளை விடப்பட்டுள்ளது. அப்போது கழிப்பறை சுவர் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இடிபாடுகளில் சிக்கி 5க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். 
இதுகுறித்து தகவல் அறிந்து காவல் துறையினர், தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர். காவல்துறை, வருவாய் துறையினர் பள்ளி நிர்வாகத்திடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாதிக்கப்பட்டுள்ள மாணவர்களின் விவரங்கள் குறித்து விசாரணை நடைபெறுகிறது. நெல்லை மாவட்ட காவல்துறை உயர் அதிகாரிகள், கல்வித்துறை அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் தற்போது சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். காவல்துறை விசாரணை நடைபெற்று வரும் நிலையில் தீயணைப்பு துறையினர் இடிபாடுகளில் சிக்கி இருந்த மாணவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்நிலையில் விபத்தில் உயிரிழந்த மாணவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. 
இந்த சம்பவம் குறித்து முதன்மை கல்வி அலுவலர் அறிக்கை அளிக்க பள்ளிக்கல்வி ஆணையர் உத்தரவிட்டுள்ளார். அறிக்கையின் அடிப்படையில் பள்ளி நிர்வாகம் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறி உள்ளார். 
இந்த விவகாரத்தில் பள்ளியின் தலைமை ஆசிரியர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
 

;