வெல்லிங்டன் ராணுவ மைதானத்தில் வைக்கப்பட்டுள்ள பிபின் ராவத் உள்பட 13 பேரின் உடல்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.
குன்னூர் அருகே நேற்று நடந்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் ராணுவ முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி உள்பட 13 பேர் நேற்று உயிரிழந்தனர். ராணுவ மருத்துவமனையில் உடற்கூராய்வுக்கு பிறகு 13 பேரின் உடலும் ராணுவ வாகனத்தில் கொண்டுசெல்லப்பட்டு வெல்லிங்டன் சதுக்கத்தில் உள்ள ராணுவ பயிற்சி மையத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இதில் தமிழக அரசு சார்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த பிபின் ராவத் மற்றும் உள்பட 13 பேரின் உடல்களுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். துக்கத்தை அனுசரிக்கும் விதமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருப்புத்துண்டு அணிந்திருந்தார்.