உதகை,ஜன.26- உதகையில் தேசிய வாக்காளர் தின விழாவை முன் னிட்டு நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற வர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. நீலகிரி மாவட்டம், உதகையில் உள்ள பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் சனியன்று தேசிய வாக்காளர் தின விழாவை முன்னிட்டு பல்வேறு போட்டிகளில் நடத் தப்படன. இதில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற வர்களுக்கு மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா மற்றும் வெல்லிங்டன் பாளையவாரியத்தின் செயல் அலுவலர் பூஜா பலிச்சா ஆகியோர் பரிசுகளை வழங்கினர். மேலும் இந்நிகழ்வில் தேசிய வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயரை சேர்ந்த வர்களும் கௌரவிக்கப்பட்டனர்.