நீலகிரி மாவட்டம் குன்னூர் - உதகமண்டலம் இடையே மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
நீலகிரி மலை ரயில் பாதையில் கேத்தி லவ்டேல் இடையே தண்டவாளத்தில் கற்பூர மரம் விழுந்ததால் மலை ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் காலை 7.45 மணிக்கு குன்னூரில் இருந்த ஊட்டிக்கு இயக்கப்படும் ரயில் மற்றும் 9.15 மணிக்கு ஊட்டியில் இருந்து குன்னூர் செல்லும் ரயில் சேவை ரத்து தண்டவாளத்தில் விழுந்த மரத்தை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.