துருக்கியில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில், இடிபாடுகளில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 36 ஆக அதிகரித்துள்ளது.
துருக்கி நாட்டில் கடந்த வெள்ளி கிழமையன்று கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இது ரிக்டரில் 6.8 ஆக பதிவாகி உள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏராளமான கட்டிடங்கள் தரைமட்டமாகி உள்ளன. இந்நிலையில் இடிபாடுகளில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 36 ஆக அதிகரித்துள்ளது. மேலும், 1,607 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும், அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் மீட்பு படையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.