tamilnadu

img

இந்திய கம்யூனிஸ்ட் இயக்க நூற்றாண்டு விழா நாமக்கல்லில் தீக்கதிர் சந்தா வழங்கல்.....

நாமக்கல்:
புதிய வேளாண் சட்டங்களால் வருகின்ற பத்து வருடத்தில் விவசாயம் முற்றிலுமாக அழிந்து விடும் அபாயம்ஏற்படும் என தீக்கதிர் சந்தா வழங்கும் நிகழ்ச்சியில் மதுக்கூர் இராமலிங்கம் கூறினார். 

நாமக்கல் மாவட்டம், எலச்சிபாளையம் சமுதாய நலக் கூடத்தில் இந்திய கம்யூனிச இயக்கத்தின் நூற்றாண்டு விழாவும், தீக்கதிர் சந்தாவழங்கும் விழாவும் செவ்வாயன்று நடைபெற்றது. இதில்கலந்து கொண்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலசெயற்குழு உறுப்பினரும், தீக்கதிர் நாளிதழின் ஆசிரியருமான மதுக்கூர் இராம லிங்கம் பேசியதாவது:இந்திய கம்யூனிஸ்ட் இயக்க வரலாற்றில் நாட்டின்சுதந்திரத்திற்காக ஏராளமான கம்யூனிஸ்ட்கள் தியாகம் செய்துள்ளனர். இன்றும் நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கும்  என்.சங்கரய்யா மற்றும் மறைந்த தலைவர் கே.டி.தங்கமணி உள்ளிட்ட தலைவர்கள் மதுரை சதி வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டு, 1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 இரவு தான் சிறையில் இருந்து வெளியே வந்தார்கள். நெல்லை சதி வழக்கில் ஆர்.நல்லக்கண்ணு போன்ற தலை வர்கள் சிறைச்சாலையில் கடுமையான தண்டனைகளைப் பெற்றவர்கள். உயிரையே பணயம் வைத்து கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு தலைமை தாங்கிய தோழர்கள் ஹர்கிஷன்சிங் சுர்ஜித், பி.ராமமூர்த்தி, வி.பி.சிந்தன் உள்ளிட்ட தலைவர்கள் கம்யூனிஸ்ட் இயக்கத்தை வளர்ப்பதற்கு பெரும்பாடு பட்டுள்ளனர்.

மேடு பள்ளமான இச்சமூகத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்காகவும், தொழிலாளர்களுக்காகவும், உழைப்பாளி மக்களுக்காக வும் கம்யூனிஸ்ட் இயக்கக் கொடி என்றும் போராடிக் கொண்டிருக்கும். மத்திய அரசு கொண்டுவந்த புதிய வேளாண் சட்டங்களால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இச்சட்டம் முழுக்க முழுக்க அம்பானி, அதானி போன்ற கார்ப்பரேட்நிறுவனத்தைச் சேர்ந்தோ ருக்கே லாபம் தருமே தவிர,விவசாயிகளுக்கு எந்தவொரு பலனும் கிடைக் காது. மேலும், பத்து ஆண்டுகளில் முற்றிலுமாக விவசாயமே செய்ய முடியாத நிலை விவசாயிகளுக்கு ஏற்படும் அபாயம் உள்ளது. இதற்கு எதிராகத் தான் கடந்த ஒரு மாத காலமாக தலைநகர் தில்லியில் நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் போராடி வருகின்றனர்.கொரோனா காலத்தில் பெரும் பாதிப்புக்கு உள்ளான பொதுமக்கள், தொழிலாளர்கள் என ஏராளமானோர் வாழ்வாதாரம்பாதிப்பால் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். ஆனால், நாட்டின் பிரதமர்,மக்களை கண்டுகொள்ளாமல் குடியுரிமை திருத்தச் சட்டம், கேஸ், பெட்ரோல் - டீசல் விலை உயர்வு, வேளாண் சட்டம் உள்ளிட்ட மக்கள் விரோத சட்டங்களை அமல்படுத்துவதிலேயே குறியாக இருந்து வருகிறார்.

தமிழகத்தை ஆளும் அதிமுக அரசானது மத்திய அரசிற்கு ஜால்ரா அடிக்கும் நடவடிக்கைகளை தொடர்ந்து நடத்தி வருகிறது. தமிழகத்தில் ஆட்சியை தக்கவைக்க இபிஎஸ்-ம், ஓபிஎஸ்-சும் போராடிக் கொண்டிருக்கும் நேரத்தில், பாஜகதான் முதல்வர் வேட்பாளரை நியமிக்க முடியும் என்று தெனாவட்டாக அறிவிப் பது சந்தேகத்தை உறுதிப்படுத்தியுள்ளது.  இவ்வாறு அவர் பேசினார்.இதைத்தொடர்ந்து, இந்நிகழ்வில் தீக்கதிர் நாளிதழுக்கு 55 ஓராண்டு சந்தாக்களும், 32 அரையாண்டு சந்தாக்களும், 13 தினசரி சந்தாக்களும் என மொத்தம்நூறு சந்தாக்கள் தொகைரூ.1 லட்சத்து 8,100ஐ  எலச்சிபாளையம், மல்லசமுத்திரம் ஒன்றியக் குழுவின் சார்பில் தீக்கதிர் ஆசிரியர் மதுக்கூர் இராமலிங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டது. எலச்சிபாளையம் ஒன்றிய செயலாளர் சு.சுரேஷ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர்என்.பாண்டி, மாவட்ட செயலாளர் எஸ்.கந்தசாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.ரங்கசாமி, மாவட்டக் குழு உறுப்பினர்கள் எஸ்.கோமதி, எஸ்.தங்கராசு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

;