tamilnadu

தஞ்சாவூர் மற்றும் கும்பகோணம் முக்கிய செய்திகள்

பொங்கல் பண்டிகையையொட்டி நாட்டுக் கோழி விற்பனை மும்முரம்

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நீலகண்ட பிள்ளையார் கோவில் எதிர்புறத்தில் உள்ள  வாரச்சந்தையில் நாட்டுக்கோழி விற்பனை சூடு பிடித்து வருகிறது. பேராவூரணி வாரச்சந்தை ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் நடைபெறும். அதே போல் ஞாயிற்றுக்கிழமை அன்று வாரச்சந்தையின் போது நாட்டுக்கோழி மொத்த வியாபாரிகளும் மற்றும் வீடுகளில் வளர்க்கும் பெண்களும் கோழிகளை விற்பனைக்காக கொண்டு வந்தனர். அதி காலை 5 மணி முதல் காலை 10 மணி வரை நாட்டு கோழி வியாபாரம் மிக மும்மரமாக நடை பெற்றது.  \

சேவல் கிலோ ரூ 450 முதல் 550 வரையும், பெட்டைக்கோழி கிலோ ரூ 600 முதல் 700 வரை விற்கப்படுவதாகவும் பொதுமக்கள் கூறினர். மேலும் சந்தை ஏலதாரருக்கு கோழி விற்றாலும் வாங்கினாலும் ரூ10 முதல் 20 ரூபாய் வரை மகமைக் கட்டணம் செலுத்த வேண்டும். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கிலோவுக்கு ரூ 150 முதல் 200 வரை கூடுதலாகவே உள்ளது என மக்கள் தெரிவித்தனர். நாட்டுக்கோழி போல் தோற்றமளிக்கும் கலப்பின பிராய்லர் கோழிகளும் விற்பனை செய்யப்பட்டன.  இதுகுறித்து கோழி வியாபாரியும், வீடுகளில் நாட்டுக்கோழி வளர்க்கும் பைங்கால் பகுதியைச் சேர்ந்த அமுதா கூறுகையில், “நாட்டுக் கோழிகளை கடந்த 15 ஆண்டுகளாக  வீட்டில் வளர்த்து வருகிறோம். 1000 க்கும் மேற்பட்ட கோழிகளை வளர்த்து அதை விற்பனை செய்வ தற்காக ஒவ்வொரு வாரமும் பேராவூரணி சந்தை, பூக்கொல்லை மற்றும் புதுக்கோட்டை கீர மங்கலம், ஆவணம், வடகாடு போன்ற பகுதிக்கும் கொண்டு சென்று விற்பனை செய்து வருகிறோம். கோழிகளை பராமரித்து இதுபோன்ற பண்டிகை காலங்களில் மட்டும் தான் நஷ்டத்தை ஈடுகட்ட சற்று கூடுதலாக விற்பனை செய்ய முடியும். இந்த தொழில் பெண்க ளுக்கான தொழில் என உறுதியாக கூறலாம். பெண்களின் உபரி செலவினங்கள் இதன் மூலம் ஈடுகட்டப்படுகிறது. செயற்கையான முறையில் உற்பத்தி செய்யப்படும் பிராய்லர் கோழி களை விட நாட்டு கோழிகள் சிறந்தவை என்றார்.

இஸ்லாமியர் களுக்கு பொங்கல் பரிசு புறக்கணிப்பு  

கும்பகோணம், ஜன.13- தஞ்சை மாவட்டம் திரு விடைமருதூரை அடுத்த திரு மங்கலக்குடியில் உள்ள ரேஷன் கடையில் இஸ்லா மியர்களுக்கு பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பு வழங் காததை கண்டித்து பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபட முயன்றதால் பர பரப்பு ஏற்பட்டது. திருவிடைமருதூரை அடுத்த திருமங்கலக்குடி யில் 3 ரேஷன் கடைகள் உள்ளன. இதில் சுமார் மூவா யிரத்துக்கும் மேற்பட்ட ரேஷன் அட்டைதாரர்கள் பொ ருட்கள் வாங்கி வருகின்ற னர். இந்த பகுதியில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் பொங்க லையொட்டி சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு அனைத்து குடும்பத்தின ருக்கும் வழங்க வேண்டும் என அரசு அறிவித்துள்ளது. ஆனால் தேர்தல் தோல் வியை மனதில் வைத்து திருமங்கலக்குடி பகுதியில் உள்ள இஸ்லாமியர்களுக்கு இந்தப்பகுதியில் உள்ள ஆளும் கட்சியை சேர்ந்த சிலர் பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பு வழங்கக் கூடாது எனக்கூறி மற்றவர்களுக்கு  மட்டும் வழங்கி வந்துள்ள னர். இதுகுறித்து இஸ்லாமி யர்கள் ஒன்றுகூடி அவர்களி டம் வந்து கேட்ட போது அவர் கள் தகாத வார்த்தைகள் கூறி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த இஸ்லாமியர்கள் ரேஷன் கடைகளுக்கு முன்பு திரண்டு போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்தனர். இதுகுறித்து தகவலறிந்த திருவிடைமருதூர் டிஎஸ்பி அசோகன் சம்பவ இடத் திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். இதையடுத்து இஸ்லாமி யர்கள் கலைந்து சென்றனர். பின்னர் அனைவருக்கும் பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது.

பேராவூரணியில் கபாடிப் போட்டி

தஞ்சாவூர், ஜன.13- தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள பழைய பேராவூரணியில் எம்.நீலகண்டன் நினைவு 3 ஆம் ஆண்டு  கபாடிப் போட்டி ஜன.17 இரவு 7 மணிக்கு நடைபெற உள்ளது. போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு முதல் பரிசு ரூ 25,003, இரண்டாம் பரிசு 20,003, மூன்றாம் பரிசு 15,003, நான்காம் பரிசு 10,003, ஆறுதல் பரிசு 5,003 மற்றும் பரிசுக் கோப்பைகள் வழங் கப்பட உள்ளன. போட்டிக்கு முன்னாள் கபாடி வீரரான, சட்டமன்ற உறுப்பினர் மா. கோவிந்தராசு தலைமை வகிக்கிறார். முன்னாள் பேரூ ராட்சி தலைவர் என்.அசோக் குமார் முன்னிலை வகிக்கி றார். காவல்துறை ஆய்வா ளர் ஜி.ராஜேந்திரன், உதவி ஆய்வாளர் இல.அருள் குமார் போட்டிகளை தொ டங்கி வைக்க உள்ளனர்.  போட்டியில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த அணிகள் பங்கேற்கின்றன. ஏற்பாடுகளை கபாடிக்குழு வினர், இளைஞர்கள் மற்றும் பழைய பேராவூரணி கிரா மத்தினர் செய்து வருகின்ற னர்.

வட்டாட்சியர் அலுவலக திறப்பு  

கும்பகோணம், ஜன.13-  தஞ்சை மாவட்டம் கும்ப கோணம் வட்டாட்சியர் அலு வலகம் ரூ 2 கோடியே 34 லட் சம் மதிப்பீட்டில் புதிய அலு வலகம் கட்டிட திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு ஆட்சியர் கோவிந்த ராவ் தலைமை தாங்கினார். கும்ப கோணம் கோட்டாட்சியர் வீராசாமி, தாசில்தார் பால சுப்பிரமணியன், முன்னாள் எம்எல்ஏ ராமநாதன் நிலவள வங்கி தலைவர் சோழபுரம் அறிவழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  வட்டாட்சியர் அலுவல கத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொளி மூலம் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் கும்பகோணம் ஒன்றிய குழு தலைவர் காயத்ரி அசோக் குமார் ஒன்றியக்குழு துணைத்தலைவர் கணேசன் மற்றும் வருவாய் துறை அதி காரிகள் கலந்து கொண்ட னர்.

ஜனவரி 16-ல் மதுக்கடைகள் மூடல் 

தஞ்சாவூர், ஜன.13- வரும் ஜனவரி 16 ஆம் தேதி திருவள்ளுவர் தினம், 26 ஆம் தேதி குடியரசு தினம் ஆக இரு நாட்கள் தஞ்சை மாவட்டத்தில் உள்ள அரசு மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுக்கூடங்கள் மற்றும் ஹோட்டல், கிளப் ஆகியவற்றுடன் இணைந்த மதுபானக் கூடங்கள் அனை த்தும் மூடப்பட்டிருக்கும் என ஆட்சியர் ம.கோவிந்த ராவ் தெரிவித்துள்ளார். 

இந்தியன் வங்கியில் வராக்கடன் வசூல் முகாம்

மன்னார்குடி, ஜன.13- திருவாரூர் மற்றும் நாகை மாவட்டங்க ளில் உள்ள இந்தியன் வங்கி கிளைகளில் வராக்கடன் வசூல் முகாம் நடைபெற்று வருகிறது.  மயிலாடுதுறை- கூறைநாடு கிளையில் நடைபெற்ற  வராக்கடன் வசூல் முகாமினை திருவாரூர் மண்டல மேலாளர் என்.ராஜாமணி தொடங்கி வைத்தார். திருவாரூர் மண்டல அலுவலக மேலாளர் ராதாகிருஷ்ணன், மார்க்கெட்டிங் அலுவலர் அசோக்,  கூறை நாடு கிளை மேலாளர் வி.தேவி, உதவி மேலா ளர் ஜெயகாந்த், கடன் பிரிவு அலுவலர் பிரபாகரன், மயிலாடுதுறை கிளையின் முதன்மை மேலாளர் ஜி.தியாகராஜன், கிளை அலுவலர்கள் ரவிச்சந்திரன், ராகுல், நரேஷ் ஆகியோர் முகாமில் கலந்து கொண்டனர்.  நகரின் பல்வேறு பகுகிளில் உள்ள கடன் தாரர்களை சந்தித்து கடன்களை உடனடி யாக திருப்பி செலுத்தவும் மற்றும் ஒரே தவணையில் கடன் தீர்வு செய்து கணக்கை முடிக்கவும் வங்கி அதிகாரிகள் அறிவுறுத்தி னர். மேலும் மன்னார்குடி இந்தியன் வங்கி  கிளையில் நடைபெற்ற முகாமில் திருவாரூர் துணை மண்டல மேலாளர் மு.செல்வநாய கம், வங்கியின் மன்னார்குடி கிளை மேலாளர் கலா, கோபாலசமுத்திரம் கிளை மேலாளர்  லெட்சுமிநாயுடு, சுயஉதவிக்குழு சிறப்பு கிளை மேலாளர் விக்னேஷ் மற்றும் வங்கி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.  மேலும் திருவாரூர், நாகை  மாவட்டங்க ளில் மன்னார்குடி, கூத்தாநல்லூர், நீடா மங்கலம்,  திருவாரூர் பெருகவாழ்ந்தான், நாகப்பட்டினம், திட்டச்சேரி, வாய்மேடு மற்றும் கொள்ளிடம் ஆகிய கிளைகளிலும் முகாம் நடைபெற்றது.

;