மயிலாடுதுறை, ஜன.23- மயிலாடுதுறை அருகே மன்னன்பந்தல் ஏவிசி கல்லூரி வேதியியல் துறை மற்றும் கோவை பி.கே குழுமத்தின் எப்பீக் கோட்டிங் ஸ்பிரே பெயின்ட் நிறுவனம் இடையே ஏழை - எளிய மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வேதியியல் துறையில் பயிலும் மாண வர்களின் ஆராய்ச்சி, செய்முறை திறன், தொழில் மற்றும் வேலைவாய்ப்பு ஏற்படுத்தும் நோக்கில் ஏவிசி கல்வி நிறுவனங்களின் செயலர் கி. கார்த்திகேயன் முன்னிலையில் வேதியியல் துறை தலைவர் டாக்டர் ஜி. விவேகானந்தன் மற்றும் எப்பீக் கோட்டிங் ஸ்பிரே பெயின்ட் நிறுவன தொழில் நுட்ப இயக்குநர் எம். ராஜன் ஆகியோர் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டனர். கல்லூரி முதல்வர் ஆர்.நாகராஜன், ஐ.க்யூ.ஏ.சி ஒருங்கிணைப்பாளர் பி.அன்புசீனிவாசன் மற்றும் கோவை பி.கே குழும நிர்வாக இயக்குநர் வாணி ஆறுமுகம் ஆகியோர் உடனிருந்தனர். புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் முதல் கட்டமாக தொழில் மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. இதில் சுமார் 150 மாணவர்கள் பயன் பெற்றனர்.