tamilnadu

வாக்கு எண்ணும் மையத்துக்கு பாதுகாப்பு வழங்க கோரிக்கை

சீர்காழி, டிச.30- நாகை மாவட்டம் கொள்ளிடம் ஒன்றியத்தில் உள்ள 42 ஊராட்சி களில் 23 ஒன்றியக்குழு உறுப்பினர் கள் இரண்டு மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்கள், 42 ஊராட்சி மன்றத் தலைவர்கள் மற்றும் 345 ஊராட்சி உறுப்பினர்களுக்கான உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது.  கொள்ளிடம் ஒன்றியத்தைச் சேர்ந்த 254 வாக்குச்சாவடிகளில் பதி வான வாக்குகள் அடங்கிய வாக்குப் பெட்டிகள், கொள்ளிடம் அருகே உள்ள புத்தூர் சீனிவாசா சுப்பராயா அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இதில் சீர்காழியில் உள்ள வாக்கு மையத்தில் வாக்குப்பெட்டி வெளியே கிடந்ததாகவும், இதனால் முறைப்படி வாக்கு எண்ணிக்கை நடைபெற வேண்டும். கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும். வாக்கு எண்ணும் மையத்துக்கு பலத்த பாதுகாப்பு அளிக்க வேண்டும் உள்ளிட்டவை வலியுறுத்தி வேட்பா ளர்கள் மற்றும் அப்பகுதி மக்கள், காமராஜ் உள்ளிட்டோர் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுக்கப் பட்டுள்ளது.