tamilnadu

நாகப்பட்டினம் , திருவாரூர் முக்கிய செய்திகள்

தமிழ்த் தாய் வாழ்த்தை புறக்கணித்த அரசுப் பள்ளி
தரங்கம்பாடி, செப்.17- நாகை மாவட்டம், தரங்கம்பாடி வட்டம், செம்பனார் கோவில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 2018-19 கல்வியாண்டில் மேல்நிலை வகுப்பு முடித்த மாணவி களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி செவ்வாயன்று நடைபெற்றது.  நிகழ்ச்சி துவக்கத்தின் போது தமிழ்த்தாய் வாழ்த்து பாடாமலேயே விழா துவங்கி லேப்டாப்கள் வழங்கப் பட்டன. இது குறித்து மாணவர்கள், செய்தியாளர்கள் மத்தி யில் அதிருப்தி ஏற்பட்டு அது குறித்து ஒரு சில ஆசிரி யர்களிடம் முறையிடப்பட்டது.ஆனால் அதையெல்லாம் பொருட்படுத்தாத பள்ளி நிர்வாகம் தேசிய கீதத்தையும் பாடாமல் நிகழ்ச்சியை முடித்து கொண்டது.

பெரியார் பிறந்த நாள் நிகழ்ச்சிகள்
மன்னார்குடி, செப்.17-பெரியாரின் 141வது பிறந்தநாள் நிகழ்ச்சிகள் பல்வேறு இயக்கங்களின் சார்பாக மன்னார்குடியில் நடைபெற்றன. திராவிடர் கழகம் சார்பில் மாவட்ட தலைவர் ஆர்.பி.எஸ். சித்தார்த்தன் தலைமையில் நகர துணைத்தலைவர் எஸ்என். உத்திராபதி பெரியார் சிலைக்கு மாலை அணி வித்து மரியாதை செலுத்தினார்.  சிபிஎம் மன்னார்குடி நகரக்குழு சார்பில் மன்னார்குடி மேலராஜவீதியில் உள்ள பெரியார் சிலைக்கு நகர செயலா ளர் எஸ். ஆறுமுகம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி னார். மாவட்டக் குழு உறுப்பினர் டி. சந்திரா, தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட பொருளாளர் கே. பிச் சைக்கண்ணு, மூத்த தோழர் பி. சந்திரகாசன், தொழிற் சங்க தலைவர் வீ. கோவிந்தராஜ், விவசாயிகள் சங்க நகர செயலாளர் ஜி.மாரிமுத்து, நகரக்குழு உறுப்பினர்கள் எம். சிராஜுதீன், கே. அகோரம், பி. கலைச்செல்வி, ப. தெட்சி ணாமூர்த்தி, தமுஎகச சார்பில் மாவட்ட தலைவர் இரா.தாமோதரன் ஆகியோர் பெரியார் சிலைக்கு மாலை அணி வித்து மரியாதை செலுத்தினர்.