தேனி, ஜன.4- ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு தேனியில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்,கலைஞர்கள் சங்க த்தின் சார்பில் கவிஞர்கள் ,எழுத்தா ளர்கள் ,கலைஞர்கள் கூடுகை நிக ழ்ச்சி நடைபெற்றது . 2020 ஜனவரி 1 புத்தாண்டை முன் னிட்டு தேனி மாவட்ட தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலை ஞர்கள் சங்கம் தேனி மாவட்ட க்குழு சார்பாக “கவிஞர்கள் எழுத்தா ளர்கள் கலைஞர்கள் கூடுகை” தேனி யில் தனியார்ஹோட்டலில் புதன்கிழமை நடைபெற்றது. இக்கூடுகையில் தேனி மாவட்ட த்தில் உள்ள தமுஎகச கிளைகளின் சார்பாக 50க்கும் மேற்பட்ட கவி ஞர்கள் கலந்து கொண்டு கவிதை வாசித்தனர். இந்நிகழ்விற்கு தமு எகசவின் தேனி மாவட்டத் தலைவர் இதயநிலவன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளரும் மாநிலசெய ற்குழு உறுப்பினருமான அய்.தமிழ்மணி நிகழ்ச்சியைத் துவக்கி வைத்து பேசினார். மாவட்டத் துணைத் தலைவர் ந.சேதுராம், தேனி கிளைத் தலைவர் கே.எஸ்.கே. நடே சன், மாவட்ட செயற்குழு உறுப்பி னர் பா.இராமமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கவிஞர்கள் வெண்புறா, வதிலை கவிவா ணன், கடமலை இரா.தங்கப்பாண்டி யன், தங்கேஸ், முனைவர் தமிழ்ச்செ ல்வி ஆகியோர் கவியரங்க த்திற்கு தலைமை தாங்கினர். கடமலை ரஞ்சித், முல்லைக்கவி கரு ப்பையா ஆகியோர் கிராமிய எழுச்சிப் பாடல்களை பாடினர். தேனி மாவட்டக்குழு சார்பாக ஆண்டுதோறும் நடைபெற்று வரும் போடி மாலன் நினைவு சிறுகதை போ ட்டிக்கான 2019 ஆண்டு போட்டி முடிவுகளை அக்குழுவின் ஒருங்கி ணைப்பாளரும் மாவட்டத் துணைத் தலைவருமான அ.உமர்பாரூக் அறி வித்தார். சென்னையில் நடந்த தென்னிந்திய மக்கள் நாடக விழா வில் கலந்து கொண்ட செவக்காட்டு கலைக்குழு கலைஞர்களுக்கு நினை வுப்பரிசு வழங்கப்பட்டது. மறைந்த சாகித்ய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர் தமுஎகச வின் முன்னத்தி ஏர்களில் ஒருவரான மறைந்த தோழர் டி.செல்வராஜ் குறித்த நினைவுகளை மாநில செய ற்குழு உறுப்பினர் எழுத்தாளர் மா. காமுத்துரை பகிர்ந்து கொ ண்டார். திருவண்ணாமலையில் நடைபெற்ற எழுத்தாளர் கலைஞர்க ளின் உலகத்திரைப்பட விழா பற்றிய பங்கேற்பு அனுபவங்களை இயக்கு னர் ரோஸ் முகிலன் பகிர்ந்து கொண்டார். த.மு.எ.க.ச வின் மாநில துணைப்பொதுச்செயலாளர் லட்சுமி காந்தன் கவிஞர்களை வாழ்த்தி நிறை வுரையாற்றினார். ஆண்டிபட்டி மாதா நன்றியுரை வழங்கினார். இந்நி கழ்வில் திரைப்பட நடிகை மகா லட்சுமி, தமுஎகச மாநிலக்குழு உறு ப்பினர்கள் நித்தியானந்தம், மோகன் குமாரமங்கலம் ,மாவட்டத்துணைச் செயலாளர்கள் விஜயராஜ்காந்தி, ஓவியா தனசேகர் உட்பட ஏராள மானோர் பங்கேற்றனர்.