tamilnadu

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டம்: 25,000 பேர் மீது வழக்குப் பதிவு

தென்காசி, டிச.31- குடியுரிமை சட்டத் திருத்த மசோதா விற்கு எதிராக தமிழகத்தில் திமுக, மா ர்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம், மனிதநேய மக்கள் கட்சி, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத், அகில இந்திய தவ்ஹீத் ஜமாத், எஸ்டிபிஐ உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்த நிலையில் தடையை மீறி தென்காசி, செங்கோட்டை, கடைய நல்லூர், பண்பொழி, வடகரை, பொட்ட ல்புதூர், அச்சன்புதூர், புளியங்குடி உள்ளிட்ட இடங்களில் போலீசாரின் தடையை மீறி ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.  தென்காசி மாவட்டம் கடைய நல்லூரில் கடந்த 10 ஆம் தேதி எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் தடையை மீறி  கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற 91 பேர் மீது கடையநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதனைத் தொடர்ந்து கடைய நல்லூரில் டிசம்பர் 24ஆம் தேதி தவ்ஹித் ஜமாத் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பா ட்டத்தில் கலந்துகொண்ட 1043 பேர்  மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது அதே நாளில் ஐக்கிய ஜமாத் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்திய 13,000 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் தென்காசியில் 27 ஆம்  தேதி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட 5,400 பேர் மீதும், பொட்டல்புதூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட 2,000ம் பேர் மீதும், புளியங்குடி நடை பெற்ற பேரணியில் கலந்துகொண்ட 4,000ம் பேர் மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.  அதன்படி தென்காசி மாவட்டத்தில் 25,000 பேர் மீது போலீசார் வழக்குப்ப திவு செய்துள்ளனர்.