tamilnadu

img

தென்காசியில் மாணவர் சங்க பொன்விழா....

தென்காசி:
தென்காசியில் இந்திய மாணவர் சங்கத்தின் 50-ம் ஆண்டு பொன் விழாகொண்டாட்டம், திறந்த வெளி கருத்தரங்கமாக நடைபெற்றது.கருத்தரங்கிற்கு மாணவர் சங்கமாவட்ட தலைவர் சத்தியா தலைமை தாங்கினார். பாரதி சஞ்சய், செண்பகவல்லி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் தலைமை ஆசிரியர் மாரியப்பன், வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் பி.உச்சிமாகாளி ஆகியோர் கருத்துரையாற்றினர். சிஐடியு மாவட்ட தலைவர் எம்.வேல்முருகன் நிறைவுரை ஆற்றினார். மாரியப்பன் நன்றி கூறினார். அருண் உட்பட 70க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

;