tamilnadu

img

இந்திய மாணவர் சங்க பொன்விழா... தமிழகம் முழுவதும் கருத்தரங்கம், கலைநிகழ்ச்சிகள்...

தென்காசி:
‘படிப்போம், போராடுவோம்’ என்ற முழக்கத்துடன் அனைவருக்கும் சமமான தரமான கல்வி கேட்டு தொடர்ந்து போராடிவரும் இந்திய மாணவர் சங்கம் 50 ஆண்டுகளை கடந்து வந்துள்ளது.  இதைத்தொடர்ந்து இந்திய மாணவர் சங்கத்தின் 50வது ஆண்டு பொன்விழா நிகழ்வு நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

தமிழகத்திலும் இந்திய மாணவர் சங்கத்தின் சார்பாக பல்வேறு பகுதிகளில் பொன்விழா நிகழ்ச்சிகள் நடைபெற்றது. தென்காசி மாவட்டம் புதிய பேருந்து நிலையம் அருகில் சத்யா தலைமையில் திறந்தவெளி கருத்தரங்கம் நடைபெற்றது. மாணவர் சங்க மாநிலச் செயலாளர் வீ.மாரியப்பன் கொடியேற்றி வைத்து நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். இராமநாதபுரத்தில் மாவட்ட செயலாளர் வசந்த் தலைமையில் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்நிகழ்வில் மாநில துணைச் செயலாளர்  ஆறு.பிரகாஷ் சிறப்புரையாற்றினார். தென் சென்னை மாவட்டத்தில் மாணவர் சங்கத்தின் சார்பாக கலை நிகழ்ச்சிகளுடன் கருத்தரங்கம் நடைபெற்றது. திருவிக அரசு கலைக்கல்லூரியில் மாவட்ட தலைவர் ஆனந்த் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மாவட்ட செயலாளர் ஹரி சுஜித் அமைப்பு கொடியேற்றினார்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் மாவட்ட செயலாளர் அமுல் காஸ்ட்ரோ கொடியேற்றி நிகழ்வினை துவக்கிவைத்துப் பேசினார்.தஞ்சாவூர்  மாவட்டம் முழுவதும் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது இதில் மாவட்ட செயலாளர் அரவிந்தசாமி உட்பட பலர்  கலந்து கொண்டனர். புதுக்கோட்டையில் மாவட்ட செயலாளர் ஜனா தலைமையில் கொடியேற்றும் நிகழ்ச்சியும் கலை நிகழ்ச்சியும் நடைபெற்றது. தூத்துக்குடியில் வட்ட செயலாளர் ஜாய்சன் தலைமையில் தியாகிகள் சோமு சொம்பு இல்லங்களில் நினைவு நிகழ்ச்சியும் கருத்தரங்கமும் நடைபெற்றது.

;