தூத்துக்குடி: தூத்துக்குடி பிரையண்ட் நகரைச் சேர்ந்த சங்கரநாராயணன் என்பவரது மனைவி மீனா (53). இவர், உடல் நலம் பாதிக்கப்பட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவ ருக்கு கொரோனா தொற்றுக்கான மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனை க்கு அனுப்பப்பட்டது. இதில் தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இதையடுத்து அவரது உடல், உறவினர் ஒப்புதலுடன் மாநகராட்சி மூலமாக நல்லடக்கம் செய்யப்பட்டது