தூத்துக்குடியில் தடகளப் பயிற்சி முகாம் ஆக.16-ல் தேர்வு போட்டிகள்
தூத்துக்குடி, ஆக.11- தூத்துக்குடியில் ஆகஸ்ட் 16-ம் தேதி தடகளப் பயிற்சி முகா மிற்கான தேர்வு போட்டிகள் நடைபெற உள்ளன. இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் டி.வி.பேட்ரிக் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், தூத்துக் குடி மாவட்டப் பிரிவின் மூலம் 2019-ம் ஆண்டிற்கான 10 முதல் 14 வயதிற்குட்பட்ட 10 மாணவர்கள், 10 மாணவிகள் தட களம் விளையாட்டில், விளையாட்டுத் திறமைகளைக் கண்ட றிந்து பயிற்சியளிக்கும் திட்டத்தின்கீழ் (Talent Hunting Camp) பயிற்சி முகாமிற்கான தேர்வுப் போட்டிகள் 16.8.2019 அன்று பிற்பகல் 2 மணி முதல் மாவட்ட விளையாட்ட ரங்கத்தில் நடைபெற உள்ளது. மாணவ, மாணவியர்களின் வயதின் அடிப்படையில் உடற்திறன் தகுதித் தேர்வு நடத்தி, இதில் 10 மாணவர்கள், 10 மாணவிகள் என மொத்தம் 20 பேர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இவர்களுக்கு மாவட்ட விளையாட்டரங்கத்தில் மாலை நேரங்களில் பயிற்சியளித்து, அவர்களுக்கு போக்கு வரத்துப்படி மற்றும் சத்தான உணவு, விளையாட்டு சீருடை மற்றும் உள்ளூர் விளையாட்டுகளில் பங்கு பெறும் சமயம் சென்று வருவதற்கான பயணச் செலவு, நுழைவுக் கட்டணம் போன்றவை வழங்கப்படும். தேர்ந்தெடுக்கப்படும் மாணவ, மாணவியர்கள் தடகள விளையாட்டில் தங்கள் திறமைகளை மேம்படுத்தி சர்வ தேச, தேசிய மற்றும் மாநில அளவில் பதக்கங்களை வெல்லும் நோக்கில் பயிற்சியளிக்கப்பட உள்ளது. தேர்ந்தெடுக்கப்படும் மாணவ, மாணவியர்கள் விளையாட்டு விடுதித் தேர்வுகள், அகாடமிக்கள் பங்குபெற சிறப்பு பயிற்சி அளிக்கப்படும். எனவே தகுதியுள்ள வீரர், வீராங்கனைகளை 16.8.2019 அன்று பிற்பகல் 2 மணிக்கு மாவட்ட விளையாட்டரங்கத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
வரதட்சணை கொடுமையால் பெண் தற்கொலை கணவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை
தூத்துக்குடி, ஆக.11- வரதட்சணை கொடுமையால் பெண் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக அவருடைய கணவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து தூத்துக்குடி மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டது. தூத்துக்குடி முத்தையாபுரம் மகாநகரை சேர்ந்தவர் சுப்பையா மகள் தனலட்சுமி (33). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த தனியார் ஏற்றுமதி-இறக்குமதி நிறுவனத்தில் பணி யாற்றும் சஞ்சய் என்பவருக்கும் கடந்த 2.11.2011 அன்று திரு மணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. திருமணத்தின் போது 50 பவுன் தங்க நகைகள் மற்றும் 4 சென்ட் இடம் ஆகியவை வரதட்சணையாக கொடுக்கப்பட்ட தாக கூறப்படுகிறது. இந்நிலையில் சஞ்சய் அவருடைய தாயார் கீதாலட்சுமி ஆகியோர் தனலட்சுமியிடம் கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இதனால் மன முடைந்த தனலட்சுமி கடந்த 16.3.2013 அன்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக சஞ்சய், கீதாலட்சுமி ஆகியோர் மீது வர தட்சணை கேட்டு தற்கொலைக்கு தூண்டியதாக முத்தையா புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதற்கிடையே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கீதாலட்சுமி உயிர் இழந்தார். இந்த வழக்கு தூத்துக்குடி மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை நீதிபதி குமார் சரவணன் விசாரித்து தீர்ப்பு கூறினார். அதில் குற்றம் சாட்டப்பட்ட சஞ்சய்க்கு 10 ஆண்டு சிறை தண்டனையும் 15 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. அபராதத்தை கட்ட தவறினால் கூடுதலாக 6 மாதம் சிறை தண்டனை விதித்து உத்தரவிடப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக அரசு தரப்பில் வக்கீல் சுபாஷினி ஆஜரானார்.
மின்சாரம் பாய்ந்து விபத்து: இளைஞர் பரிதாப சாவு
தூத்துக்குடி, ஆக.11- கோவில்பட்டி அருகே காமநாயக்கன்பட்டி நடுத்தெரு வை சேர்ந்தவர் ஜேசுமணி மகன் ஜான்ரீகன் (32). இவர் காம நாயக்கன்பட்டியிலுள்ள சர்ச்சில் மின்வயர்களை பழுது பார்த்து கொண்டிருந்த போது எதிர்பாராவிதமாக மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்டு அங்கேயே உயிரிழந்தார். இது குறித்து கொப்பம்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.
ஆடுகள் திருடியவர் கைது
தூத்துக்குடி, ஆக.11- தூத்துக்குடி தாளமுத்துநகர் அருகே அன்னை வேளாங்கண்ணி நகரை சேர்ந்தவர் கோபால் இவரது மகன் செந்தில்வேல் (43). இவர் சொந்தமாக ஆடுகள் வளர்த்து வரு கிறார். வீட்டின் பின்புறத்தில் மந்தையில் வைத்திருந்த ஆடு களில் 11 ஆடுகளை சென்ற 7ம் தேதி மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். இது குறித்த விசாரணையில் தூத்துக்குடி மாதாநகரை சேர்ந்த வேல்முருகன் மகன் மணிகண்டன் (38) என்பவரை கைது செய்து 11 ஆடுகளை மீட்டனர். இதன் மதிப்பு சுமார் ரூ. ஒன்றரை லட்சம் என கூறப்படுகிறது.