tamilnadu

தூத்துக்குடி,திருநெல்வேலி,நாகர்கோவில் முக்கிய செய்திகள்

9 மீனவர்கள் மீட்பு  

தூத்துக்குடி, ஜூலை 26- தூத்துக்குடி தருவைக்குளம் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் 9 மீனவர்கள் நாகை கடல் பகுதிக்கு மீன் பிடிக்க சென்றனர். இதில் பாம்பன் பகுதியில் அவர்கள் சென்ற போது அங்குள்ள பாறையில் எதிர்பாராவிதமாக படகு மோதி விபத்துக்குள்ளானது. இதில் மீனவர்கள் கடலில் விழுந்து தத்தளித்த னர். இதன் தகவல் அறிந்ததும் இராமநாத புரம் கடலோர காவல்படையினர் ஹெலி காப்டர் மூலம் கடலில் தத்தளித்த மீன வர்களை பத்திரமாக மீட்டனர். அவர் களுக்கு பாம்பன் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. 

தூத்துக்குடி விமான ஓடுபாதை விரிவாக்கம்  

தூத்துக்குடி, ஜூலை 26- தூத்துக்குடி விமான நிலையத்தில் சிறிய வகை விமானங்கள் மட்டுமே வந்து செல்லும் வகையில் ஓடுபாதை இருந்தது. தற்போது பெரிய வகை விமானங்கள் வந்து செல்லும் வகையில் 3115 மீட்டா் நீளம், 45 மீட்டா் அகலம் கொண்ட ஓடு பாதை அமைக்கும் விரிவாக்கப் பணி வெள்ளியன்று துவங்கப்பட்டது. இப்பணி களை துவக்கி வைத்து விமான நிலைய இயக்குநா் என்.சுப்பிரமணியன் கூறும் போது, இப்பணி ஒன்றரை ஆண்டுக்குள் முடிக்கத் திட்டமிட்டுள்ளது. பணிகள் முடி வடைந்த பிறகு ஏா்பஸ் 321 வகை பெரிய விமானங்கள் வந்து செல்ல முடியும் என்றார்.

நெல்லையில் ஒரே நாளில் 190 பேருக்கு தொற்று

 திருநெல்வேலி, ஜூலை 26- கொரோனாவால் பாதிக்கப்படு பவர்களின் எண்ணிக்கை சென்னையில் குறைந்து வரும் நிலையில், தென் மாவட் டங்களில் பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. இந்நிலையில் நெல்லை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் 190 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,785 ஆக உயர்ந்துள்ளது.

கபசுர குடிநீர் வழங்கல்

நாகர்கோவில், ஜூலை 26- இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத் தின் திருவரம்புகிளை மற்றும் லிபி ஹோமி யோபதி மருத்துவமனை சார்பில் மக்க ளுக்கு தொற்றுநோய் எதிர்ப்பு சக்தி வழங்கும் ஹோமியோபதி மருந்து இலவ சமாக வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு, பிர வின்லால் தலைமை தாங்கினார். அரசு துவக்கி வைத்தார். வட்டார தலைவர் காட்சே, பொருளாளர் ஆன்றணி அஜின், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  வட்டார செயலாளர் வில்சன், மாவட்ட குழு உறுப் பினர் சகாயஆன்றணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  இது போல் வாலிபர் சங்கத்தின் தோட் டாவரம் கிளை சார்பில் 2-வது முறையாக கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. நிகழ்வை சங்கத்தின் வட்டார பொருளாளர் ஆன்றணி ஆஜின் துவக்கி வைத்தார். கிளை தலைவர் அஜெய், செயலாளர் டைட்டஸ் ஜிஜோ உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

முரண்பாடுகளுக்கு இடம் கொடுக்காமல் விசாரிக்க கோரிக்கை

 நாகர்கோவில், ஜூலை 26- நாகர்கோவில் காசியால் பெண்கள் பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்ட பெண்கள் அளித்துள்ள வழக்கில் புகார் அளித்த பெண்களின் ஒப்புதல் வாக்குமூலம் பெறப்பட்டதா என்பது ரகசியமாகவே உள்ளது. சிபிசிஐடி விசார ணையில் வெளிப்படைத் தன்மை இல்லை என தமிழ்நாடு மீன் பிடி தொழிற்சங்க கூட்டமைப்பு குற்றம்சாட்டியுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பு மாநில தலைவர் ஜி.செலஸ்டின், பொதுச்செயலாளர் எஸ்.அந்தோணி ஆகி யோர் மாநில சிபிசிஐடி டிஜிபிக்கு மனு அனுப்பி யுள்ளனர். அதில் கூறப்பட்டுள்ளதாவது: சமீப கால மாக குமரி மாவட்டத்தில் விபச்சார வழக்குகள், கந்து வட்டி, பாலியல் வழக்குகள், மோசடி வழக்குகள் தொடர்ந்து அதிகரித்துள்ளன. இதில் காவல்துறை யில் ஒரு சிலரின் துணையோடு மறைக்கப்படு கிறது. நாகர்கோவில், கணேசபுரம் பகுதியை சேர்ந்த தங்கபாண்டியன் மகன் காசி என்ற சுஜி மீது மாவட்டத்திலுள்ள வெவ்வேறு காவல்நிலை யங்களில் கந்து வட்டி, பாலியல் உள்பட பல வழக்கு கள் பதிவாகின. காசிக்கு, காவல்துறையிலுள்ள முக்கிய நபர்கள் தொடர்பு இருந்ததால் அவரது நீண்ட கால மோசமான செயல்கள் மறைக்கப்பட்டு வந்துள்ளன. அவரது வீட்டின் சுமார் 1000 அடி அரு கிலுள்ள கோட்டார் காவல் நிலையத்திற்கு தெரிந்தே நடந்துள்ளது. காசி அவர்களது கூட்டாளி கள் நடத்திய கந்து வட்டித் தொழிலை திட்டமிட்டு காவல்துறையினர் மறைத்துள்ளனர்.  இந்நிலையில் இந்த வழக்கை சிபிசிஐடி விசாரித்தனர். இதில் இதுவரை வழக்கில் முக்கி யமாக புகார் கொடுத்தவர்களது ஒப்புதல் வாக்கு மூலங்கள் வாங்கப்பட்டதா என்பது தெரிய வில்லை. இந்த வழக்கில் எந்தவித சட்ட முரண்பாடு களுக்கு இடம் கொடுக்காமல் சி.பி.சி.ஐ.டி. விசா ரணையை உத்தரவாதப்படுத்த வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

 

 

 

;