தூத்துக்குடி மாவட்டத்தில் குளம் தூர்வாரும் பணிகளை ஆட்சியர் சந்தீப் நந்தூரி ஆய்வு
தூத்துக்குடி, ஆக.25- தூத்துக்குடி மாவட்டத்தில் குளம் தூர்வாரும் பணிகளை ஆட்சியர் சந்தீப் நந்தூரி பார்வையிட்டு ஆய்வு செய்தார். சாத்தான்குளம், உடன்குடி யூனியன் பகுதிகளில் ஊரக வளர்ச்சி முகமை மூலம் ஜல்சக்தி அபியான் திட்டத்தில் மழை நீர் சேமிப்பு மற்றும் குளங்கள், ஓடைகளை தூர்வாரும் பணி கள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை மாவட்ட ஆட்சி யர் சந்தீப் நந்தூரி, ஜல்சக்தி அபியான் திட்ட கண்காணிப்பா ளர் பிரனாவ் குல்லர் ஆகியோர் சனியன்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அவர்கள் சாத்தான்குளம் யூனியன் கொம்மடிக்கோட்டை படுக்கப்பத்து கால்வாயில் ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் செல வில் அமைக்கப்பட்ட தடுப்பணை, நரையன்குடியிருப்பில் பொதுமக்கள் பங்களிப்புடன் ரூ.2 லட்சம் செலவில் 5 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்படும் குளம் போன்றவற்றை பார்வை யிட்டு ஆய்வு செய்தனர். ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்கு னர் தனபதி, திருச்செந்தூர் கோட்டாட்சியர் (பொறுப்பு) விஜய குமார், சாத்தான்குளம் தாசில்தார் ஞானராஜ் மற்றும் பலர் உடன் இருந்தனர். பின்னர் விளாத்திகுளம் கண்மாய் மறுகால் ஓடை தூர்வா ரும் பணியை ஆட்சியர் சந்தீப் நந்தூரி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னவாசல் ஏரியை தூர்வாரியதாக ரூ.40 லட்சம் மோசடி சிபிஎம் தலைமையில் மக்கள் போராட்டம் அறிவிப்பு
தஞ்சாவூர், ஆக.25- தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியை அடுத்த பின்ன வாசல் பெரிய ஏரியை தூர்வாராமல், தூர் வாரியதாக பொய்க் கணக்கு காட்டி, ரூ 40 லட்சம் மோசடி செய்து, கையாடல் செய்வதற்கு துணை போகும், பொதுப்பணித்துறை உதவிப் பொறியாளரைக் கண்டித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, பின்னவாசல் கிராம விவசாய சங்கம், பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் சார்பில் வரும் 28 ஆம் தேதி காலை பேராவூரணி பொதுப்பணித்துறை அலுவலகம் முன்பாக சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என அறி விக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இப்பகுதி மக்கள் கூறுகையில், “பின்ன வாசல் கிராமத்தில் 153 ஹெக்டேர் பரப்பளவு உள்ள பெரிய ஏரி உள்ளது. இதன் மூலம் 174 ஹெக்டேர் 12.50 ஏர்ஸ் விவ சாய நிலம் பயன்பாட்டில் உள்ளது. இதில் தோராயமாக 700 பட்டாதாரர்கள் பாசனம் செய்து பயன் அடைந்து வரு கின்றனர். இந்த ஏரி குடிமராமத்து பணிக்காக அரசு ரூ40 லட்சம் ஒதுக்கீடு செய்தது. இந்த குடிமராமத்து பணிக்காக அரசால் ஒதுக்கப்பட்ட நிதியை பயன்பாட்டுக்கு கொண்டு வர கிராம பொதுமக்களை, பாசனதாரர்களை கலந்தாலோசிக்காமல், ஒரு சில தனிப்பட்ட நபர்கள் மற்றும் பட்டா இல்லாத நபர்களை, தன்னிச்சையாக சேர்த்துக் கொண்டு அரசால் ஒதுக்கப்பட்ட நிதியை முறைகேடாக பெற முயன்றனர். இதனை, எதிர்த்து கிராம பொதுமக்கள், விவசாயிகள் மற்றும் இளைஞர்கள் சேர்ந்து உதவி பொறியாளர், உதவி செயற்பொறியாளர், வட்டாட்சியர், மாவட்ட ஆட்சியர் ஆகி யோருக்கு மனு அனுப்பப்பட்டது. இது குறித்து மதுரை உயர்நீதிமன்ற கிளையிலும் வழக்கு தொடரப்பட்டு நிலுவையில் உள்ளது. இதனைப் பொருட்படுத்தாமல் தனிப் பட்ட நபர்களுக்கு குடிமராமத்து பணிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனை கண்டித்து பொதுப்பணித்துறை அலுவலகம் முன்பாக போராட்டம் நடத்தப்பட உள்ளது” என தெரிவித்தனர்.
எதிர்க்கட்சித் தலைவர்களை காஷ்மீருக்குள் அனுமதிக்காதது கண்டனத்துக்குரியது சு.திருநாவுக்கரசர் எம்.பி., பேட்டி
புதுக்கோட்டை, ஆக.25- ஜம்மு-காஷ்மீருக்குச் சென்ற எதிர்க்கட்சித் தலை வர்களை அனுமதிக்காதது கடும் கண்டனத்துக்கு உரியது என்றார் திருச்சி மக்களவை உறுப்பினர் சு.திருநாவுக்கரசு. புதுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர் களுக்கு அவர் அளித்த பேட்டி: ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்களை ஜம்மு காஷ்மீருக்குள் நுழைய விடாமல் தடுத்தது அப்பட்டமான ஜன நாயகப் படுகொலை. கடும் கண்டனத்துக்குரியது. காஷ்மீர் விவகாரத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஒரே நிலைப்பாட்டில் தான் உள்ளார். ப.சிதம்பரம் கைது செய்யப்பட்ட விதம் தவறானது. பழிவாங்கும் நோக்கத்தோடு பா.ஜ.க., கைது நடவடிக்கையில் ஈடுபட்டாலும், அதற்கு ஒரு போதும் அஞ்சமாட்டோம். நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டில் சில மாற்றங்கள் செய்த தைப் பார்க்கும் போது பட்ஜெட்டில் தவறு உள்ளதை உணர்த்து கிறது. அவர் சில மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது போது மானதாக இல்லை. வேலையில்லாத் திண்டாட்டத்தை போக்கும் நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க வேண்டும். திருச்சி துப்பாக்கி தொழிற்சாலையை தனியார் மயமாக்கும் முயற்சி மற்றும் அரசு துறை நிறுவனங்களை தனியார் மய மாக்கும் திட்டம் கண்டனத்திற்குரியது என்றார்.