பெண்ணிடம் நகை பறிப்பு
தூத்துக்குடி, ஏப்.22-தூத்துக்குடி மேலசண்முகபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஆரோக்கியசாமி மனைவி ஜெனிபர் (30). இவர் ஞாயிறன்று மாலை தூத்துக்குடி விஇ ரோட்டில் நடந்து வந்தபோது ஒரு பைக்கில் வந்த 3 பேர் கொண்ட கும்பல் ஜெனிபர் கழுத்தில் கிடந்த 6 பவுன் செயினை பறித்துச் சென்றது. இதுகுறித்த புகாரின் பேரில் மத்தியபாகம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆண் சடலம் மீட்பு
தூத்துக்குடி, ஏப்.22-தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் பூங்கா கடற்கரை ஓரத்தில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஒன்று கரை ஒதுங்கியது. முகம் சிதைந்த நிலையில் இருப்பதால் அவர் யார் என்பதை அடையாளம் காண முடியவில்லை. இறந்து கிடந்தவருக்கு சுமார் 15 முதல் 25 வயது இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.