tamilnadu

பைக் திருட்டு: 3 பேர் கைது

தூத்துக்குடி, மார்ச் 5- தூத்துக்குடியில் மோட்டார் பைக்கு கள் திருட்டு வழக்கில் 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 2 பைக்குகள் மீட்கப்பட்டுள்ளது.  தூத்துக்குடி அண்ணாநகர் 5வது தெருவைச் சேர்ந்தவர் முருகேச பாண்டி யன் மகன் பாலசுப்பிரமணியன் (28). இவர் லெவிஞ்சிபுரத்தில் உள்ள டாஸ்மாக் கடை முன்பு தனது பைக்கை நிறுத்தியிருந்தார். திரும்பி வந்து பார்த்தபோது அவரது பைக் திருடுபோயிருந்தது. இதுபோல் சென்னை திருவெற்றியூர் பெரிய கண்ணா ளம்பட்டியைச் சேர்ந்த நரசிம்மன் மகன் ஆதவன் (21), தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மாணவரான இவர், தனது பைக்கை மருத்துவக் கல்லூரி அருகே நிறுத்தியிருந்த பைக் திருடுபோனது.  இந்த இரு சம்பவங்கள் குறித்தும் தனித்தனியே தென்பாகம் காவல் நிலை யத்தில் புகார் அளிக்கப்பட்டது. சப் இன்ஸ்பெக்டர் சங்கர் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினார். பைக் திருட்டு தொடர்பாக தூத்துக்குடி முத்தையாபுரம் அருகேயுள்ள எம் சவேரியார் புரத்தைச் சேர்ந்த மங்களபாண்டி மகன் தங்கதுரை (25), முத்தையாபுரம் கணேஷ் நகரைச் சேர்ந்த கிருஷ்ணபாண்டி மகன் முத்து குமார் (23), முத்தையாபுரம் கக்கன்ஜி நகரைச் சேர்ந்த ராஜபாண்டி மகன் ராஜா (22) ஆகிய மூவரையும் காவல்துறை யினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 பைக்குகளும் மீட்கப்பட்டுள் ளது.