குடவாசல், டிச.24- திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றியம் குளிக்கரை கிராமத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்,இ ந்திய கம்யூனிஸ்ட், திமுக கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைமையிலான ஜனநாயக முற்போக்கு கூட்டணி கட்சியினர் திங்கள் கிழமை வாக்கு சேகரித்தனர். குளிக்கரையில் நடைபெற்ற பிரச்சாரத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கொரடாச்சேரி ஒன்றிய செயலாளர் கே.சீனிவாசன் தலைமை தாங்கினார். மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினருக்கு போட்டியிடும் (திமுக )ராஜேஸ்வரி ஜெகதீவ்ராம், ஒன்றியக் குழு உறுப்பினருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளர் வார்டு 17 அமுதா செல்லதுரை,ஊராட்சி மன்ற தலைவருக்கு போட்டியிடுவர்களுக்கு உதயசூரியன்,அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்திற்கு வாக்கு சேகரித்து மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன் வாக்கு சேகரித்தார். இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.சேகர், விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ்.தம்புசாமி,ஒன்றியகுழு உறுப்பினர்கள் டி.ஜெயபால்,என்.மலர்குமார் உள்ளிட்டோர் மற்றும் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதே போல் திருவாரூர் ஒன்றியத்தில் பின்னவாசல் (எஸ்.ரகுபதி)திருக்கரவாசல் (பி.ஆர்.தியாகராஜன்)புதுபத்தூர் (ஆர்.எஸ்.சுந்தரய்யா ஆகியோர் ஊராட்சி கிராமங்களில் ஊராட்சி தலைவருக்கு,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாகவும்,ஒன்றிய கவுன்சிலர் வார்டு 16 க்கு போட்டியிடும் ஜி.வசந்தா மற்றும் திமுக சார்பாக மாவட்ட கவுன்சிலருக்கு கருணாகரன் ஆகியோர் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஐ.வி.நாகராஜன் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.பழனிவேல் மற்றும் பி.மாதவன்,ஜி.பவுன்ராஜ்,கோசி.மணி,எஸ்.சேகர் உள்ளிட்ட ஏராளமான தோழர்கள் உற்சாகத்துடன் வாக்கு சேகரிப்பில் கலந்துகொண்டனர். வேட்பாளர்களுக்கு வாக்கு கேட்ட சென்றவிடமெல்லாம் பொதுமக்களிடம் இருந்து மகிழ்ச்சியான உற்சாகமான வரவேற்பு காண முடிந்தது.