tamilnadu

img

கம்யூனிஸ்ட் அறிக்கை வாசிப்பு

கம்யூனிஸ்ட் அறிக்கை வெளியான தினமான மார்ச் 18 அன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  திருத்துறைப்பூண்டி நகரக் குழுவின் சார்பில் வாசிப்பு இயக்கம் நடைபெற்றது. திருத்துறைப்பூண்டி18 வது வார்டு சிங்களாந்தி கிளையின் சார்பில் கம்யூனிஸ்ட் அறிக்கை புத்தகம் வாசிக்கப்பட்டது. இதில் கட்சியின் நகர செயலாளர் கே.ஜி.ரகுராமன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் டி.சுப்ரமணியன், எஸ்.சாமிநாதன், நகரக் குழு உறுப்பினர் எம்.ஜெயப்பிரகாஷ், கிளை செயலாளர் விஸ்வநாதன், கட்டுமான தொழிலாளர் சங்க மாவட்டக் குழு உறுப்பினர் ராமச்சந்திரன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். மேலும் கட்சியின் 10 கிளைகளில் வாசிப்பு இயக்கம் நடைபெற்றது.