முத்துப்பேட்டை, ஏப்.20- பிளஸ்-2 பொதுத்தேர்வில், திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ரஹ்மத் பெண்கள் மெட்ரிக் மேனிலைப்பள்ளி 12 ஆண்டுகளாக தொடர்ந்து 100 சதவீத தேர்ச்சி கண்டு சாதனை படைத்து வருகிறது. பள்ளியின் ஏ.ஹசீனா நஸ்ரீன் 577 மதிப்பெண் பெற்று பள்ளியின் முதல் மாணவியாக திகழ்கிறார். ஏன்.ஜெயா 565 மதிப்பெண்களும், எம்.பெரோஸ் பானு 560 மதிப்பெண்களும் பெற்று முறையே இரண்டாவது, மூன்றாவது மாணவிகளாக திகழ்கிறார்கள். தேர்வெழுதியவர்களில் 23 சதவீத மாணவிகள் 500 மதிப்பெண்களுக்கு மேலும், 25 சதவீத மாணவிகள் 450 மதிப்பெண்களுக்கு மேலும், 36 சதவீத மாணவிகள் 400 மதிப்பெண்களுக்கும் மேல் பெற்று, இப்பள்ளியின் மாணவிகளும், ஆசிரியர்களும் கற்றலின் கற்பித்தலின் மேன்மையை வெளிப்படுத்தியுள்ளனர். இப்பள்ளியின் வி.புவ்யா தாவரவியலிலும், எம்.மூபினா கணினி அறிவியலிலும், எம்.பெரோஸ் பானு வணிகவியலிலும், ஏ.ஹசீனா நஸ்ரீன் கணக்குப் பதவியலிலும் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றிருப்பது குறிப்பிடத்தகுந்தது.