குடவாசல், ஏப்.21-குடவாசல் அருகே மஞ்சக்குடியில் உள்ள டி.டி.நரசிம்மன் சுவாமி தயானந்தா மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 12-ஆம் வகுப்புப் பொதுத்தேர்வில் 100ரூ தேர்ச்சி பெற்று சிறப்பிடம் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர். பொதுத்தேர்வை 173 மாணவர்கள் எழுதினர். இதில் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்று 100ரூ வெற்றி பெற்றனர்.மேலும் முதல் குரூப்பில் கணிதம், உயிரியல் பிரிவு பயின்ற ச.விக்னேஷ்வர் என்ற மாணவன் 600 -580 மார்க் எடுத்தும் கணிதம், மின்னணுவியல் மாணவர்கள் தியாகராஜன் 600-554, விக்னேஷ் 600-550 மதிப்பெண்கள் எடுத்து பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர். பள்ளி தாளாளர் சாந்தி ரங்கநாதன், நல்லாசிரியர் விருது பெற்றவரும், தலைமையாசிரியருமான கே.பாஸ்கர் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் சாதனை மாணவர்களை பாராட்டினர்.