மன்னார்குடி, பிப்.17- திருவாரூர் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் உதவியுடன் எஸ்.சிவானந்தம், மதுரை தியாகி எஸ்.ராமையா முதலியார், எஸ்.நடேசதேவர், கே.ராதா கிருஷ்ணன் ஆகியோரின் நினை வாக மன்னார்குடி லயன்ஸ் சங்கம், டெம்பிள்சிட்டி லயன்ஸ் சங்கம் மற்றும் புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை ஆகிய அமைப்புகள் இணைந்து நடத்தும் இலவச கண் பரி சோதனை முகாம் பிப்ரவரி- 23 ஆம் தேதி காலை 8 முதல் மதியம் 1 மணி வரை மன்னார் குடி மதுக்கூர் சாலையில் உள்ள லயன்ஸ் ஹெல்த் சென்டரில் நடைபெறவுள்ளது. முகாமில் கண்புரை, சர்க்கரை நோய், கண் நீர் அழுத்த நோய், குழந்தைக ளின் கண் நோய், கிட்டப் பார்வை, தூரப்பார்வை, வெள்ளெழுத்து ஆகிய குறைபாடுகளுடையோர் சிகிச்சை மற்றும் ஆலோ சனை பெறுவதற்கு உரிய வகையில் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. 4 ஆண்டுகளு க்கு பிறகு இந்த சேவை இப் பகுதியில் நடைபெறுவதால் பொதுமக்கள் அனைவரும் முகாமில் கலந்து கொண்டு பயன் பெறலாம். மேலும் விவரங்களுக்கு 99437 92121/99421 94860 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ள லாம். இவ்வாறு நிகழ்ச்சி ஏற் பாட்டாளர்கள் தெரிவித்துள் ளனர்.