திருவாரூர், ஜன.5- ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக தலைமை யிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி முன் னிலை வகித்து சிறப்பான வெற்றியை பெற்றுள் ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இந்த தேர்த லில் திருவாரூர் மாவட்டத்தில் குறிப்பிடத்தக்க பெருமைக்குரிய வெற்றியை பெற்றுள்ளது. குறிப்பாக கோட்டூர் ஒன்றியம் இருள்நீக்கி ஊராட்சி யில் ஊராட்சி மன்ற தலைவர் பொறுப்பினை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கைப்பற்றியுள்ளது. மேலும் இந்த ஊராட்சியின் 6 வார்டு உறுப்பி னர்களையும் சிபிஐ, சிபிஎம் தலா மூன்று இடங்களை மொத்தமாக வென்றுள்ளது. ஊராட்சி மன்ற தலை வரையும் சேர்த்து வார்டு உறுப்பினர்களில் ஐந்து பெண்கள் உட்பட ஆறு பேர் பெண் நிர்வாகிகள் என்பது சிறப்பான செய்தியாகும். இந்த ஊராட்சியில் தியாகி ஜெ.நாவலனின் புதல்வி செங்கொடி குமாரராஜா ஊராட்சி மன்ற தலைவராக மக்களால் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவரது கணவர் ஆர்.குமாரராஜா கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினராகவும், முழு நேர ஊழியராக வும் பணியாற்றி வருகிறார்.
இடதுபாதை
கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலான இருள்நீக்கி ஊராட்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தோழர்களே ஊராட்சி மன்ற தலைவர்களாக தொடர்ந்து பணியாற்றி வந்துள்ளனர். ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராக இருந்த பி.உத்திராபதி தொடங்கி மறைந்த சிபிஐ மூத்த தலைவர் பி.ராமலிங்கம், பி. தெட்சிணாமூர்த்தி, ஜெ.குமார் ஆகியோர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தலைவராக தேர்வு செய்யப்பட்டு பணியாற்றியுள்ளனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மறைந்த தலைவர் பி.பொதியப்பன், கே.தவமணி, ஜி.வடுவம்மாள், என்.எம்.சண்முகசுந்தரம் ஆகி யோர் ஊராட்சி மன்ற தலைவராக பணியாற்றி யுள்ளனர். கடந்த முறை ஊராட்சி மன்ற தலை வராக பணியாற்றிய என்.எம்.சண்முக சுந்தரம் மறைந்த சிபிஎம் மூத்த தலைவர் என்.மணியனின் புதல்வர் ஆவார். தற்போது பல்வேறு சூழ்ச்சிகளை முறியடித்து செங்கொடி குமாரராஜா ஊராட்சி மன்ற தலை வராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து இந்த ஊராட்சி கம்யூனிஸ்ட் கட்சிகளின் பணிகளின் கீழ் செயல்பட்டு வருவதற்கு மார்க்சிய லெனினிய கோட்பாடுகளின் அடிப்படையில் மக்களோடு இரண்டற கலந்து பொது வாழ்வில் அர்ப்பணிப்பு டன் பணியாற்றுவதே காரணமாகும்.
பொது வாழ்வு பணி
இந்த தேர்தலில் இடதுசாரி கட்சிகள் ஒருங்கி ணைந்து பணியாற்றியதால் 100 சதவீத வெற்றி கிட்டி யுள்ளது. முழுக்க முழுக்க சிபிஎம், சிபிஐ கட்சியைச் சேர்ந்தவர்கள் மட்டுமே இந்த ஊராட்சியை பணி செய்ய இருக்கிறார்கள் என்பது ஒரு மெச்சத்தக்க செய்தியாகும். இந்த வெற்றிக்கு பின்னால் கடந்த முறை ஊராட்சி மன்ற தலைவராக பணியாற்றிய என்.எம். சண்முக சுந்தரத்தின் தலைமையிலான உள்ளாட்சி பணியில் ஊழலற்ற, லஞ்சமற்ற செயல்பாடு ஒரு முக்கிய காரணியாகும். பொதுவாக ஏழை, எளிய மக்களுக்கு பல்வேறு திட்டங்கள் மூலம் கட்டிக் கொடுக்கப்படுகிற வீடுகளுக்காக பயனாளிகளிடம் தலா ரூ.10 ஆயிரம் பிற ஊராட்சிகளில் லஞ்சமாக பெறுவது வழக்கமான ஒன்றாக இருந்துள்ளது. அதனை முற்றிலுமாக முறியடித்து ஏழை எளிய மக்களிடம் கையூட்டு பெறாமல் 50 பய னாளிகளுக்கு வீடுகளை கட்டிக் கொடுத்துள்ளார் என்.எம்.சண்முகசுந்தரம். பொது வாழ்வு பணி எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இவரது இந்த அணுகுமுறை அனைவரும் கடைப்பிடிக்க வேண் டிய இலக்கணம் ஆகும். அது மட்டுமல்லாது இவரது பணிக் காலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் திரு மணம் மண்டபம் ஒன்றைக் கட்டிக் கொடுத்துள் ளார். 13 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நெரிஞ்சினங்குடி யில் சேவை மையம் ஒன்றைக் கட்டிக் கொடுத்துள் ளார். மேலும் ஊராட்சியின் பல்வேறு பகுதிகளில் சாலை வசதிகளை மேம்படுத்தியுள்ளார். சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து மழலைகள் பயிலக் கூடிய பாலர் பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டி கொடுத்துள்ளார். சோத்திரியம் பகுதி யில் உள்ள சுடுகாட்டிற்கு இறந்தவர்களின் உடலை காட்டு வாய்க்காலில் இறங்கி எடுத்துச் செல்ல வேண்டிய நிலையை மாற்றி மூன்று லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பாலம் கட்டிக் கொடுத்துள்ளார். குடிநீர் வசதி, தெரு விளக்கு வசதி, பொது சுகா தார வசதி போன்றவற்றை மக்களின் குறையறிந்து அதனை தீர்த்து செவ்வனே நிறைவேற்றியுள்ளார். அரசின் மக்கள் நலத் திட்டங்கள் அனைத்தும் லஞ்ச லாவன்யம் இல்லாமல் மக்களுக்கு விடுபடாமல் கிடைத்திட உறுதி செய்துள்ளார். மேலும் 2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 15 ஆம் தேதி டெல்டா மாவட்டங்களை புரட்டிப் போட்ட கஜா புயல் கோரத் தாண்டவத்திலிருந்து இப்பகுதி மக்களை மீட்பதற்கு அயராது பணி யாற்றியுள்ளார். ஒரு சிறந்த மார்க்சிஸ்ட் கட்சி ஊழி யனாக மக்களோடு மக்களாக தனது தொண்டினை செய்துள்ளார். இந்த சிறப்புகள் அனைத்தும் தற்போ தைய வெற்றிக்கு மிகவும் உதவியாகவும், மக்களின் நம்பிக்கைக்கு மேலும் வலு சேர்ப்பதாகவும் அமைந்துவிட்டது.
செங்கொடி பாதையில்
தொடர்ந்து செங்கொடி பாதையில் பயணிக்கும் இருள்நீக்கி ஊராட்சியில் இந்த முறை செங்கொடி யை வீழ்த்துவதற்காக திரைமறைவில் பலரும் செய்த சதிவேலைகளை முறியடித்து செங்கொடி குமாரராஜா பதிவான 1109 வாக்குகளில் 428 வாக்கு களை பெற்று சிறப்பான வெற்றியை பெற்றுள் ளார். ஊராட்சி வார்டு உறுப்பினர்களாக முறையே ஆர்.திலகவதி(சிபிஎம்) 1-வது வார்டு, ஆர்.பிச்சை யம்மாள் (சிபிஐ) 2-வது வார்டு, என்.மலர்கொடி (சிபிஎம்) 3-வது வார்டு, ஆர்.அமுதா (சிபிஐ) 4-வது வார்டு, பி.முரளி (சிபிஐ) 5-வது வார்டு, எஸ்.ஜெய லெட்சுமி (சிபிஎம்) 6-வது வார்டு ஆகியோர் மக்களின் பெரும் ஆதரவோடு வெற்றி பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற மகிழ்ச்சியுடனும், பொறுப்பு ணர்வுடனும் இருந்த ஊராட்சி மன்ற தலைவராக பொறுப்பேற்கவுள்ள செங்கொடி குமாரராஜா விடம் ஊராட்சிக்கு செய்யவிருக்கும் பணிகள் குறித்து கேட்ட போது, பொது வாழ்வின் நேர்மை யான இலக்கணத்திற்கு பெருமை சேர்க்கும் வகை யில் எனது பணி அமையும். கடந்த காலங்களில் இந்த ஊராட்சியில் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் எப்படி பணியாற்றினார்களோ அதே பொறுப்புணர் வோடு செங்கொடி பாதையில் பயணம் செய்து மக்கள் பணியாற்றுவேன். அடிப்படை தேவைகளை தீர்த்து வைப்ப தற்கு முன்னுரிமை அளிப்பேன். தேர்தல் நேரத்தில் மக்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத் துள்ளனர். அவை அனைத்தையும் இந்த ஐந்தாண்டு காலத்தில் செய்து முடிப்பேன். கட்சியின் உரிய வழி காட்டுதலைப் பெற்று திறம்பட பணியாற்றி தேசிய அளவில் முன்மாதிரி ஊராட்சியாக இருள்நீக்கி ஊராட்சியை கொண்டு வருவேன் என உறுதிபடக் கூறினார். விவசாயத்தை முதன்மையான தொழிலாக கொண்டு வாழ்ந்து வரும் இப்பகுதி விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், ஏழை எளிய மக்கள், பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சமூக உழைக்கும் மக்கள் அனைவரது இருளையும் நீக்கிவதற்காக இந்த ஊராட்சியை பொறுத்தவரை செங்கொடி தொடர்ந்து பட்டொளி வீசி பறந்து கொண்டே இருக்கி றது. இந்த வரலாற்று பதிவில் செங்கொடி குமார ராஜாவும் இணைந்துள்ளார். இம்மாதம் 19 ஆம் தேதி தியாகி ஜெ.நாவல னின் 9-ஆம் ஆண்டு நினைவு தினமாகும். இந்த மாதத்தில் அவரது பிரியமான புதல்வி செங்கொடி குமாரராஜா ஊராட்சி மன்ற தலைவராக பொறுப் பேற்க இருப்பது வரலாற்றின் பக்கங்களில் ஒரு குறிப்பிடத்தக்க பதிவாகும். - எஸ்.நவமணி
வாழ்த்து
திருவாரூர் மாவட்டம் இருள்நீக்கி ஊராட்சியிலும், கன்னியாகுமரி மாவட்டம் முழுக்கோடு ஊராட்சியிலும் கடந்த அரை நூற்றாண்டு காலமாக செங்கொடியே மகத்தான வெற்றிக் கொடியாக பறந்து வருகிறது. இத்தேர்தலிலும் அத்தகைய வெற்றியை ஈட்டியுள்ள இருள்நீக்கி, முழுக்கோடு ஊராட்சி தலைவர்களுக்கும் வெற்றிக்கு பணியாற்றிய அனைத்து தோழர்களுக்கும் இதயப்பூர்வமான வாழ்த்துக்களை, மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தெரிவித்துக் கொள்கிறது. - கே.பாலகிருஷ்ணன்