திருவள்ளூர், ஏப். 26-அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் திருவள்ளூர் மாவட்டப் பொருளாளர் ஏ.பத்மா தாயாரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஊத்துக்கோட்டை வட்டக்குழு உறுப்பினர் பி. அருள் மாமியாருமான சாந்தி (55) வியாழனன்று காலமானார். அவரது உடலுக்கு கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ். கோபால், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே.செல்வராஜ், டி.பன்னீர்செல்வம், ஜி.சம்பத், ஏ.ஜி.கண்ணன், பி.துளசிநாராயணன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் எஸ்.எம்.அனீப், பி.ரவி, இ.மோகனா, சி.பாலாஜி, என்.கங்காதரன், அ.து.கோதண்டன் உட்பட பலர் அஞ்சலி செலுத்தினர்.மறைந்த சாந்தியின் உடல் வெள்ளியன்று அவரின் சொந்த ஊரான பெரியபாளையம் அடுத்த பனப்பாக்கம் கிராமத்தில் அடக்கம் செய்யப்பட்டது.