செவ்வாய், ஜனவரி 19, 2021

tamilnadu

img

திருவள்ளூர் தொகுதியில் சிபிஎம் இறுதி கட்ட பிரச்சாரம்

திருவள்ளூர், ஏப்.16-மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் திருவள்ளூர் (தனி) மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் முனைவர் கே.ஜெயக்குமாருக்கு கை சின்னத்திற்கு வாக்கு கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கும்மிடிப்பூண்டி, ஊத்துக்கோட்டை, திருவள்ளூர், பூந்தமல்லி, ஆவடி, மாதவரம், பொன்னேரி, சோழவரம் பகுதிகளில் பிரச்சாரம் நடைபெற்றது. மீஞ்சூர் அருகே உள்ள அத்திப்பட்டு புதுநகர் பகுதியிலிருந்து துவங்கிய பிரச்சாரம் பட்டமந்திரி, மீஞ்சூர், அரியன்வாயல், நெய்தவாயல், திருவெள்ளைவாயல், காட்டூர், வஞ்சிவாக்கம், திருப்பாளைவனம், பழவேற்காடு ஆகிய பகுதிகளில் இரண்டு சக்கர வாகனங்கள் மூலம் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டனர். இதில் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.விஜயன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் எஸ். எம்.அனீப், ஜி.விநாயகமூர்த்தி, கட்டுமான சங்கத்தின் மாவட்டத் தலைவர் எம்.நாகராஜன், சிஐடியூ மாவட்ட பொருளாளர் ஆர்.பூபாலன், இ.ஜெயவேலு, காங்கிரஸ் கட்சி மாநில பேச்சாளர் பழவை செந்தில்குமார், திமுக இலக்கிய அணி நிர்வாகி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

;