புதிய கண்காணிப்பாளர்
திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக எஸ்.அரவிந்தன் ஞாயிறன்று (ஜூலை 12) பொறுப்பேற்றுக் கொண்டார்.
விழிப்புணர்வு பிரச்சாரம்
கிருஷ்ணகிரி நகரில் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் முககவசம் அணிந்து அவசிய தேவைக்கு மட்டும் வெளியே வர வேண்டும் என்று துணை காவல் கண்காணிப்பாளர் சரவணன் கூறினார்.
நிவாரண உதவி
தேசிய அடையாள அட்டை வைத்துள்ள மாற்றுத்திறனாளிகள் வி.ஏ.ஓ.,வை அணுகி நிவாரண தொகை பெற்றுக்கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை அறிவித்துள்ளார்.
வருவாய் ஆய்வாளர் பலி
சென்னைக்கு அருகே உள்ள ஆவடி மாநகராட்சியில் வருவாய் ஆய்வாளராக பணியாற்றி வந்த ஸ்ரீதர் (வயது47) கொரோனா தொற்றுக்கு ஆளாகி ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் ஞாயிறன்று (ஜூலை 12) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
10 பேருக்கு கொரோனா
செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் பேரூராட்சி அலுவலகத்தில் 10 பேருக்கு கொரோனா உறுதிபடுத்தப்பட்டது. இதையடுத்து பேரூராட்சி அலுவலகம் மூடப்பட்டது. ஏற்கெனவே ஒரு துப்புரவு தொழிலாளி தொற்று ஏற்பட்டு உயிரிழந்தார். இந்நிலையில் பேரூராட்சியில் பணிபுரியும் அலுவலக பணியாளர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் என 128 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டுது. இதில் 10 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.