tamilnadu

வேலியில் சிக்கிய மானை கடித்து கொன்ற நாய்கள்

திருவண்ணாமலை ஜுன் 25- திருவண்ணாமலை தீப மலை அடி வாரத்தில் வனப்பகுதி உள்ளது. இங்கு ஏராள மான மான்கள் வசித்து வருகின்றன. கிரிவலப் பாதையில் செல்பவர்கள் காலை, மாலை நேரங்களில் சாலையோரங்க ளில் மான்கள் மேய்வதை காணமுடியும் . பச்சையம்மன் கோவில் அருகில் தண்ணீர்  குடிக்க வந்த ஒரு ஆண் மான் வேலியை தாண்டி செல்ல முயன்றபோது அதன் கொம்பு கள் வேலியில் மாட்டிக்கொண்டன. அப்போது  அங்கு வந்த தெருநாய்கள் மானின் பின்பக்க  கால்தொடையை கடித்து குதறின. இதில் அந்தமான் பரிதாபமாக உயிரிழந்தது. இதனை கண்ட பொது மக்கள் வனத்துறை அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் வனக்காப்பாளர்கள் சம்பவ இடத்திற்கு வந்து பலியான மானை மீட்டு  பரிசோதனைக்காக கால்நடை மருத்துவ மனைக்கு எடுத்துச் சென்றனர். அங்கு பரி சோதனை செய்யப்பட்டு மான் உடல் வனப்  பகுதியில் புதைக்கப்பட்டது.