tamilnadu

img

கலை இலக்கிய போராளி தோழர் கருப்பு கருணா உடல் தானம்.....

திருவண்ணாமலை:
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநில துணை பொதுச் செயலாளர் கருப்பு கருணா திங்களனறு(டிச.21) மாரடைப்பால் காலமானார்.  திருக்கோயிலூர் சாலையில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டிருந்த  உடலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் க. கனகராஜ், மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில பொதுச் செயலாளர் கே. சாமுவேல்ராஜ், தமுஎகச மதிப்புறு தலைவர் ச.தமிழ்செல்வன், மாநில பொதுச் செயலாளர் ஆதவன் தீட்சண்யா, பொருளாளர் சு.இராமச்சந்திரன், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் சுகந்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எம். சிவக்குமார், மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா, மாநில, மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்டோர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

ஊர்வலம்
இதனைத் தொடர்ந்து, செவ்வாய்ன்று காலை 10 மணிக்கு தோழர் கருப்பு கருணாவின் உடல் அவரது வீட்டிலிருந்து, திருவள்ளுவர் சிலை, கட்டபொம்மன் தெரு, பெரியார் சிலை, புதிய பேருந்து நிலையம், அவலூர் பேட்டை சாலை, வழியாக அரசு மருத்துவமனைக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு மருத்துவக் கல்லூரியில் ஒப்படைக்கப்பட்டது.

கண்ணீர் அஞ்சலி
முன்னதாக, கருப்பு கருணா வீட்டின் எதிரே அஞ்சலிக் கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பாலாஜி தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் க.கனகராஜ், தமுஎகச மதிப்புறு தலைவர் ச.தமிழ்செல்வன், மாநிலபொதுச் செயலாளர் ஆதன் தீட்சண்யா,பொருளாளர் சு.ராமச்சந்திரன், சு.வெங்கடேசன் எம்பி,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவண்ணாமலை மாவட்டச் செயலாளர் எம்.சிவகுமார், வேலூர் மாவட்டச் செயலாளர் எஸ்.தயாநிதி.கவிஞர் நந்தலாலா, ஓவியர் வெண்புறா, திரைக் கலைஞர் ரோகினி, நாடக கலைஞர் பார்த்திபராஜா, எஸ்கேபி கல்லூரி முதல் வர் கருணா, புதுகை பூபாளம் பிரகதீஸ்வரன், தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் பெ.அன்பு, சைதை ஜெ, பொதுப் பள்ளிகளுக்கான மாநில மேடை பிரின்ஸ் கஜேந்திரபாபு.எழுத்தாளர் பவா செல்லதுரை, பாண்டிச்சேரி தமுஎகச செயலாளர் உமா,  நீலம் இதழ் ஆசிரியர் வாசுகி பாஸ்கர், தமுஎகச தலைவர்களில் ஒருவரான ஆரிசன், சுந்தரவள்ளி, இயக்குனர் லெனின் பாரதி, சிபிஎம் மூத்த தலைவர் எம். வீரபத்திரன் உள்ளிட்ட பலர் அஞ்சலி உரையாற்றினர்.இந்த அஞ்சலி நிகழ்ச்சியில் கருப்பு கருணாவின் மகள் சொர்ணமுகி பேசியபோது, “என் தந்தையின் முற்போக்கு சிந்தனைகளும், தைரியத்துடனும், போராடும் குணத்துடனும் எங்களை வளர்த்து உள்ளதால், அவர் வழிகாட்டுதலின்படி எங்கள் குடும்பம் பயணிக்கும்” என்றார்.