இடுவாய் ஊராட்சியில் 66.18 சதவிகிதம் வாக்குப்பதிவு
திருப்பூர், டிச. 27 - இடுவாய் ஊராட்சியில் மொத்த வாக்காளர்கள் 7 ஆயிரத்து 312 பேரில் 4ஆயிரத்து 839 பேர் வாக்க ளித்தனர். மொத்தம் பதிவான வாக்கு சதவிகிதம் 66.18 சதவிகிதம் எனத் தெரிவித்தனர்.
பூத் சிலிப்பை பறித்த வேட்பாளர்கள்
அவிநாசி, டிச. 27- அவிநாசி அருகே சின்னேரிபாளையத்தில் ஊராட்சி செயலரிடமிருந்து பூத் சிலிப் பறிக்கப் ்பட்டதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அவிநாசி ஒன்றியம், சின்னேரிபாளையம் ஊராட்சி உள்ளிட்ட 31 ஊராட்சிகளுக்கு டிச.30 ஆம் தேதி இரண்டாம் கட்டமாக தேர்தல் நடைபெற வுள்ளது. இந்த நிலையில் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள், வாக்காளர்களுக்குரிய பூத் சிலிப்பை ஊராட்சி செயலரிடம் வழங்கியுள்ளனர். ஊராட்சி செயலர் அப்பகுதியிலுள்ள அங்கன்வாடி பணியா ளர்களிடம் அவற்றை வழங்கினார். இந்நிலையில், அங்கன்வாடி பணியாளரிடம் இருந்து பூத் சிலிப் மொத்தமாக சில வேட்பாளர்கள் பெற்றுச் சென்ற தாகக் கூறப்பட் டது. இதுகுறித்து ரங்காநகர், செல்வபுரம், வளைய பாளையம், முரளிக்காடுகாலனி, சிலுவைபுரம் பகுதியில் உள்ள 600க்கும் மேற்பட்ட வாக்காளர் களுக்கான பூத் சிலிப்பை வேட்பாளர்கள் சிலர் கையகப்படுத்தி அவற்றுடன் பணமும் விநியோ கிக்க திட்டமிட்டுள்ளதாகப் புகார் எழுந்தது. இதையடுத்து அங்கன்வாடி பணியாளர்களிடம் இருந்த பூத் சிலிப், மீண்டும் ஊராட்சி செயலரிடம் ஒப்படைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். தொடர்ந்து அவரவர் வீடுகளுக்கு சென்று விநி யோகிக்க அறிவுறுத்தப்பட்டது. இச்சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
பழனிகவுண்டன் வலசு வாக்குச்சாவடியில் ஒன்னரை மணி நேரம் வாக்குப்பதிவு நிறுத்தம்
திருப்பூர், டிச. 27 - தாராபுரம் அருகே முத்திரை இல்லா மல் வாக்குகள் பதிவிடப்பட்டு வாக்குப் பெட்டியில் போடப்பட்டதாக எழுந்த புகா ரால் ஒன்னரை மணிநேரம் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. திருப்பூர் மாவட்டம், நல்லாம்பாளை யம் ஊராட்சிக்கு உட்பட்ட பழனிகவுண் டன்வலசு வாக்குசாவடி எண் 56 இல் வாக்களிக்கும் முத்திரை இல்லாமல் 318 வாக்குகள் பதிவிடப்பட்டு வாக்குப்பெட் டியில் போடப்பட்டதாக காங்கிரஸ் கட்சி யினர் புகார் கூறினர். வாக்களிக்கும் முத் திரை இல்லாததால் மேற்படி 318 வாக்கு கள் செல்லாதவையாக ஆக்கப்பட்டு விட் டன. எனவே மறு வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என காங்கிரஸ் கட்சி யின் மாவட்டத் தலைவர் வழக்கறி ஞர் தென்னரசு உள்ளிட்டோர் கூறினர். இத னால் அங்கு வாக்குப்பதிவு நிறுத்தப் பட்டது. இதையடுத்து தேர்தல் அலுவலர் கள் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தி விளக்கம் கூறினர்.இதன் பிறகு வாக்குப்பதிவு தொடர்ந்து நடைபெற்றது. இதனால் சுமார் ஒன்றரை மணி நேரம் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. மாலை 3.30 மணிக்கு மீண்டும் வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்றது.
அவிநாசி: இரவு நேரங்களில் மண் திருட்டு
அவிநாசி, டிச. 27- அவிநாசி வட்டம், தெக்கலூர் ஊராட் சிக்கு உள்பட்ட செங்காளிபாளையத்தில் இரவு நேரங்களில் தொடர்ந்து மண் திருட்டு நடைபெறுவதாக புகார் எழுந்துள்ளது. இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் கூறியதாவது, செங்காளிபாளையத்தில் அரசுக்கு சொந்த மான(க.சா.எண்.266) 30 ஏக்கர் புறம் போக்கு நிலம் உள்ளது. இந்நிலத் தில் இரவு நேரங்களில் மண்ணை அனு மதியின்றி அள்ளிச் செல்கின்றனர். இதுதொடர்பாக ஏற்கனவே வருவாய்த் துறையினரிடம் புகார் தெரிவித்துள் ளோம். இருப்பினும் இரவு நேரங்களில் வீதி முறைகளுக்கு மாறாக மண் திருட்டு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதுகுறித்து வருவாய்த்துறையினரிடம் கேட்ட போது, அவிநாசி பகுதியில் செங் காளிபாளையத்தில் கடந்த வாரம் மண் திருட்டு நடைபெறுவதாக வந்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தோம். அங்கு மண் அள்ளாமல் நின்று கொண்டிருந்த காலி டிப்பர் லாரிகள் மட் டுமே இருந்தன. உடனே லாரி ஓட்டுநர்க ளிடம் இங்கு மண் அள்ளக் கூடாது, மீறி னால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்து எழுத்துப் பூர்வமான உறுதி பெற்று அனுப்பினோம். தற்போது இரவு நேரத்தில் மண் அள்ளுவதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். உடனடியாக ஆய்வு மேற்கொண்டு தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றனர்.