tamilnadu

திருப்பூர் மற்றும் கோவை முக்கிய செய்திகள்

சிறுமிக்கு பாலியல் தொல்லை இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது 

திருப்பூர்,டிச.18- பல்லடம் அருகே வீட்டில் தனியாக இருந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே உள்ள மங்கலம் சுல்தான் பேட்டை சேர்ந்த தம்பதியினர், பனியன் நிறுவனத்துக்கு செவ்வாயன்று வேலைக்கு சென்றனர். இதனால் இவர்களது 12 வயது மகள் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.அப்போது அதே பகுதியைச் சேர்ந்த விக்னேஷ்(30) என்பவர் வீட்டுக்குள் புகுந்து சிறுமிக்கு பாலியல் கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமியின் பெற்றோர், பல்லடம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.இந்த விசாரனையில் விக்னேஷ் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அவரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.  

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் - சிறப்பு நீதிமன்றம் திறப்பு

கோவை, டிச. 18 –  குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்கள் தொடர்பாக  விசாரிப்பதற்காக  கோவையில் சிறப்பு நீதிமன்றம் புதனன்று திறந்து வைக்கப்பட்டது.  கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் பாலியல் வன்முறையிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்ட சிறப்பு நீதிமன்றம் மற்றும் குழந்தைகள் தோழமை நீதிமன்ற அறை போன்றவற்றை கோவை மாவட்ட முதன்மை நீதிபதி சக்திவேல் திறந்துவைத்தார். இந்த நிகழ்வின் போது, கோவை நீதிமன்ற வளாகத்தில் உள்ள பல்வேறு நீதிபதிகள் வழக்கறிஞர்கள், தமிழ்நாடு, புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள், காவல்துறையினர் என பல்வேறு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.