tamilnadu

திருப்பூர் முக்கிய செய்திகள்

உள்ளாட்சி தேர்தல்: பதற்றமான வாக்குச்சாவடிகளை கண்காணிக்க நுண்பார்வையாளர்கள் நியமனம்     
திருப்பூர், டிச. 25- ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதற்ற மான வாக்குச்சாவடிகளை கண்காணிக்க நுண்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள் ளதாக திருப்பூர் மாவட்ட தேர்தல் பார்வை யாளர் தெரிவித்துள்ளார். திருப்பூர் மாவட்ட ஆட்சியரக அலுவ லக கூட்டரங்கில், பதற்றமான வாக்குச் சாவடிகளை கண்காணிப்பதற்காக நுண் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள வங்கி மற்றும் மத்திய அரசு அலுவலர்க ளுக்கு பயிற்சியளிக்கப்பட்டது. இதில் மாவட்ட தேர்தல் பார்வையாளர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் தெரிவிக்கை யில், திருப்பூர் மாவட்டத்தில், ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதரண தேர்தல்களுக்கு 13 ஊராட்சி ஒன்றியங் களில் 1704 வாக்குச்சாவடிகள் அமைக்கப் பட்டுள்ளன.  இதில் 156 பதற்றமானவையாகவும், 94 வாக்குச்சாவடிகள் மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகளாகவும், கண்டறியப்பட் டுள்ளன. இதில், 30 வாக்குச்சாவடிகளை இணையதள கண்காணிப்பு மூலமாகவும், 100 வாக்குச்சாவடிகளில் வீடியோ கிராபி மூலமாகவும் கண்காணிப்படும். 120 வாக் குச்சாவடிகளில் நுண்தேர்தல் மேற்பார்வை யாளர்கள் மூலமாகவும் கண்காணிக்கப்பட வுள்ளது.  இதில், நுண்பார்வையாளர்கள் பணி யானது முக்கியமானதாகும்.  இப்பணிக்காக  அந்த வாக்குச்சாவடிகளை கண்காணிக்க வங்கி மற்றும் மத்திய அரசு பணியாளர்களை நுண்பார்வையாளர்களாக நியமிக்கப்பட் டுள்ளனர். நுண்பார்வையாளர்கள் ஒவ் வொரு வரும் அவர்களது வாக்குச்சாவடி கள் தொடர்பான அனைத்து விபரங்களை யும் நன்கு தெரிந்து கொள்வதோடு, தேர் தல் தொடர்பான அனைத்து ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். மேலும், முறையான பதிவேடுகளை பராமரித்து அவற்றை வாக்குப்பதிவு நாளன்று வாக் குப்பதிவு முடிந்தவுடன் பொதுப்பார்வை யாளரிடம் சமர்பிக்க வேண்டும். நுண்பார் வையாளர்கள் வாக்குப்பதிவு துவங்குவ தற்கு 1 மணி நேரத்திற்கு முன்பாக தங்க ளுக்கு ஒதுக்கப்பட்ட வாக்குச்சாவடிக ளுக்கு வருகை புரிய வேண்டும். வாக்குப் பதிவு நிறைவு பெறுவதற்குள் வாக்காளர் கள் வருகை புரிந்தால் அவர்களுக்கு டோக் கன் வழங்க வேண்டும். அனைவரும் வாக் களிக்கும் வகையில் தங்களது பணியினை சிறப்பான முறையில் மேற்கொள்ள வேண் டும். மேலும், தேர்தலை நேர்மையாக நடத்திட உறுதுணையாக இருக்க வேண்டு மென தெரிவித்தனர்.

உடுமலை நகராட்சி ஊழியர்களை அச்சுறுத்தும் முன்னாள் கவுன்சிலர்கள் – போலி பத்திரிகையாளர் கும்பல் 
திருப்பூர், டிச. 25 – உடுமலைபேட்டை நகராட்சி ஊழியர் களை மிரட்டும் அதிமுக முன்னாள் கவுன்சி லர்கள் மற்றும் போலி பத்திரிகையாளர் கும்பல் மீது நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் காவல் துறையில் புகார் கொடுத்துள்ளனர். உடுமலைபேட்டை நகராட்சியில் சாதிக் அலி, சக்திவேல், கோபிநாத் உள் ளிட்டோர் உதவியாளர்களாக வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் கவுன்சி லர்கள் சி.தன்ராஜ், எம்.அபுதாஹீர் ஆகி யோர் இடைத்தரகர்களாகச் செயல்பட்டு நகராட்சி ஊழியர்களிடம் அவர்கள் சொல் லும் வேலையை முடித்துக் கொடுக்க வேண் டும் என தொடர்ந்து தொந்தரவு செய்து வரு கின்றனர். அத்துடன் அவர்கள் கேட்கும் வேலையை செய்து தர மறுத்தால், அவர் களை மிரட்டுவது, போலி பத்திரிகையாளர் கும்பலை ஏவிவிட்டு, தங்களுக்கு ஒத்து ழைக்காத ஊழியர்களிடம் பணம் கேட்டு மிரட்டுவது, அவதூறு செய்திகளை வெளி யிடுவேன் என மிரட்டுவது போன்ற காரி யங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் மேற்படி நகராட்சி ஊழியர்கள் மட்டுமின்றி  அலுவலகத்தில் பணியாற்றும் பலரும் மிகுந்த மன உளைச்சலில் பாதிக்கட் பட்டுள்ளதாக அரசு ஊழியர் சங்கத்தினர் தெரிவித்தனர். இந்நிலையில் உடுமலைப்பேட்டை நகராட்சியில் பணிபுரியும் ஊழியர்களை மிரட்டி பணம் பறிக்கும் கும்பல்களை கண்டித்தும், காவல்துறையின் மூலம் ந டவடிக்கை எடுக்க கோரியும் அரசு  ஊழியர் சங்க நிர்வாகிகள் கூட்டத்தில்  தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த  முடிவின் அடிப்படையில் செவ்வாயன்று உடுமலை நகராட்சி ஆணையரையும், காவல்துறை அதிகாரிகளையும் அரசு ஊழியர் சங்க மாவட்ட, வட்டக் கிளை நிர்வா கிகள்  சந்தித்து புகார் கடிதம் கொடுத்தனர். குறிப்பாக, ஆளும் கட்சி போர்வை யில் அராஜக செயலில் ஈடுபடும் நபர்களின் மீதும், பணம் கேட்டு மிரட்டும் போலி  பத்திரிக்கையாளர்கள் மீதும் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர். மேலும் அரசு ஊழியர்கள் பணிக்குப் பாதுகாப்பை உத்தரவாதம் செய்யும் வகையில், பணம் கேட்டு மிரட்டி அவதூறு செய்தி வெளி யிடுவோர் மீது வழக்குப் பதிவு செய்வது டன் அவர்களைக் கைது செய்ய வேண்டும் என்றும் அரசு ஊழியர் சங்க உடுமலை வட்டக்கிளை நிர்வாகிகள் வலியுறுத்தி உள்ளனர்.