வியாழன், ஜனவரி 21, 2021

tamilnadu

img

கருவூலத்துறையின் நடவடிக்கையை கண்டித்து அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

அவிநாசி, ஜுன் 7- ஊழியர் நலனுக்கு எதிராக செயல்படும் கரு வூலத்துறையின் நடவ டிக்கையை கண்டித்து அவிநாசியில் அரசு ஊழி யர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சார்நிலை கருவூலங் களில் செயல்படாத  இணையதளம் மற்றும் குறைபாடுள்ள மென் பொருளைக் கொண்டு பணி செய்ய நிர்பந்திப் பது உள்ளிட்ட கருவூலத் துறையின் ஊழியர் நலனுக்கு எதிரான நடவடிக்கைகளை கண் டித்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் வெள்ளியன்று அவிநாசியில் வட்டாட் சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அரசு ஊழியர் சங்க வட்ட கிளை தலைவர் ரமேஷ் தலைமை யில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கிளை செயலாளர் கருப்பன், சுமதி ஆகி யோர் கண்டன உரையாற்றினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோர் கருவூலத் துறையின் நடவடிக்கைகளை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.

;