tamilnadu

img

முதல் கட்ட இழப்பீடு தர பவர்கிரிட் பணிகள் நிறுத்தி வைப்பு விவசாயிகளிடம் மாவட்ட ஆட்சியர் உறுதி

திருப்பூர், ஜன. 22 – பல்லடம் வட்டம் செம்மிபாளையம் கிராம விவசாயிகளுக்கு, முதல் கட்ட இழப்பீடு தருவதுடன் மூன்று நாட் கள் வேலையை நிறுத்தி வைக்க உத்தர விடுவதாக விவசாயிகளிடம் திருப்பூர் மாவட்ட ஆட்சியர்  க.விஜயகார்த்தி கேயன் உறுதியளித்தார். பல்லடம் வட்டம், செம்மிபாளை யம் கிராமத்தில் விவசாயிகளுக்கு எந்த இழப்பீடும் கொடுக்காமல் காவல்து றையினரை முன்னிறுத்திக் கொண்டு பவர்கிரிட் நிறுவனத்தார் செவ்வா யன்று உயர் மின்னழுத்த கோபுரப் பணியைத் தொடங்கினர்.  விவசாயி களின் அடிப்படை வாழ்வாதார உரி மைகளைப் பொருட்படுத்தாமல், பவர் கிரிட் நிறுவனத்தார் காவல் துறையி னரை வைத்துக் கொண்டு அத்துமீறி வேலையைத் தொடங்கியதற்கு செம்மி பாளையம் கிராம விவசாயிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். எனவே, இந்த அத்துமீறிய நடவ டிக்கையைக் கண்டித்து புதனன்று பெண்கள் உட்பட  விவசாயிகள் 70க் கும் மேற்பட்டோர் ஆடு, மாடு உள் ளிட்ட கால்நடைகளுடன் தங்களு டைய வீடுகளை விட்டு வெளியேறி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடி யேறும் போராட்டத்திற்கு புறப்பட் டனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தின் மாவட்டச் செயலாளர் ஆர்.குமார், பல்லடம் ஒன்றியச் செயலாளர் வை. பழனிச்சாமி உள்ளிட்டோர் விவசாயி களுடன் நடைபயணமாக திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக் கிப் புறப்பட்டு வந்தனர்.  இது குறித்து, தகவல் அறிந்த மாவட்ட நிர்வாகம் பல்லடம் நால் ரோடு சந்திப்பில் விவசாயிகளை தடுத்து நிறுத்தி பல்லடம் வட்டாட் சியர் அலுவலகத்துக்கு வரும்படியும், அங்கு பேச்சுவார்த்தை வைத்துக் கொள்ளலாம் என அழைத்தனர். ஆனால் விவசாயிகள் இதற்கு மறுப்புத் தெரிவித்ததுடன் ஆட்சியரகத்துக்கு செல்வோம் என உறுதியாகக் கூறி னர். இதையடுத்து, திருப்பூர் கோட் டாட்சியருடன் பேச்சுவார்த்தை நடத் துவதற்கு பல்லடம் பொதுப்பணித் துறை விருந்தினர் மாளிகைக்கு  வரும் படி வருவாய்த் துறையினர், காவல் துறையினர் மீண்டும் வற்புறுத்தி அழைத்துச் சென்றனர். இதையடுத்து பல்லடம் விருந்தினர் மாளிகையில் செவ்வாயன்று இரவு கோட்டாட்சியர் கவிதாவுடன் விவசாய சங்க நிர்வாகி கள், விவசாயிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இப்பேச்சுவார்த்தையில், கோவை மாவட்டத்தை போன்று திருப்பூர் மாவட்டத்திலும் அதிகபட்ச வழி காட்டி மதிப்பின்படி நிலத்திற்கு இழப் பீடு நிர்ணயம் செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். இதற்கான பரிந்து ரையை மாவட்ட ஆட்சியர் செவ்வா யன்று நில நிர்வாக ஆணையருக்கு அனுப்பி உள்ளதாகவும், அது குறித்து முடிவு தெரியும் வரை உயர்மின் கோபுர பணிகளை பவர்கிரிட் நிர்வாகம் நிறுத்தி வைப்பதாகவும் கோட்டாட்சி யர் கவிதா உறுதியளித்தார். அத்து டன் பாதிக்கப்பட்ட விவசாயிகள், விவ சாய சங்க நிர்வாகிகள் புதன்கிழமை மாவட்ட ஆட்சியரை சந்தித்துப் பேச வும் முடிவு செய்யப்பட்டது. அதன்படி, புதன்கிழமை மதியம் 12  மணியளவில் செம்மிபாளையம் பகுதி விவசாயிகள், விவசாயிகள் சங்க ஒருங் கிணைப்புக்குழு சார்பில் வழக்கறிஞர் ஈசன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க  மாவட்டச் செயலாளர் ஆர்.குமார், பல் லடம் வை.பழனிச்சாமி, சி.ஆர்.சண்மு கம், புண்ணியமூர்த்தி உள்ளிட்டோர் மாவட்ட ஆட்சியர் க.விஜயகார்த்திகே யனை சந்தித்தனர். இப்பேச்சுவார்த்தையில், செம்மி பாளையம் விவசாயிகளுக்கு ஏற்க னவே பவர்கிரிட் நிறுவனம் நிர்ணயித் துள்ள இழப்பீட்டுத் தொகையை முதல் கட்ட இழப்பீடாக உடனடியாக வழங்க ஆட்சியர் விஜயகார்த்திகே யன் உத்தரவிட்டார். அத்துடன் நில நிர்வாக ஆணையருக்கு அனுப்பி யுள்ள கடிதத்தின் அடிப்படையில் ஓரிரு நாட்களில் கோவை மாவட் டத்தில் நிர்ணயிக்கப்பட்டதற்கு இணையான அதிகபட்ச வழிகாட்டு மதிப்பிலான இழப்பீடு வழங்குவது பற்றி தெரியவரும். அதுவரை மூன்று நாட்களுக்கு பவர்கிரிட் அதிகாரிகள் பணியை நிறுத்தி வைத்திருப்பார்கள். முதல்கட்ட இழப்பீடு பெற்றுக் கொண்டு விவசாயிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் ஆட்சியர் விஜயகார்த்திகேயன் கேட்டுக் கொண் டார். இதன் அடிப்படையில் பவர்கி ரிட் பணிகள் மேற்கண்ட செம்மிபாளை யம் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட் டுள்ளது.