அரசு மருத்துவர் வீட்டில் 40 சவரன் நகை கொள்ளை
அவிநாசி, ஜூலை 15- அவிநாசி அருகே அரசு மருத்துவர் வீட்டில் பூட்டை உடைத்து 40 சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவிநாசியை அடுத்து சாலையப்பாளையம், ஜெய்சக்தி அவென்யூ பகுதியை சேர்ந்தவர் மருத்துவர் ரங்கசாமி. இவர் ஈரோடு மாவட்டம், நம்பியூர் அரசு மருத்துவ மணையில் மருத்துவராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி கவிதா, அவிநாசி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், கடந்த சனிக்கிழமை உறவினர் வீட்டு திரு மணத்திற்காக வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் வெளி யூர் சென்றுவிட்டு ஞாயிறன்று இரவு வீடு திரும்பியுள்ளனர். அப்போது வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்து உள்ளே சென்று பார்த்த போது, மூன்று பீரோக்கள் உடைக்கப்பட்டு அதிலிருந்த சுமார் இருபது லட்சம் ரூபாய் மதிப்பிலான 40 சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்கள் கொள்ளை யடிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இது குறித்து அவர் அளித்த புகாரின்பேரில் அவிநாசி காவல் துறையினர் மோப்ப நாய், கை ரேகை நிபுணர்கள் மற்றும் தடையவியல் நிபுணர்களை வரவழைத்து சோதனை மேற்கொண்டு விசாரணையை துரிதப்படுத்தியுள்ளனர்.
குண்டடம், முலனூரில் இன்று மின்தடை
தாராபுரம், ஜுலை 15 - குண்டடம், முலனுர் மற்றும் கொளத்துப்பாளையம், கன்னிவாடி பகுதிகளில் செவ்வாயன்று மின் பராமரிப்பு பணிகளுக்காக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தாராபுரம் மின்வாரிய செயற் பொறியாளர் மாகேஸ்வரன் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, தமிழ்நாடு மின்சார வாரியம், பல்லடம் மின்பகிர்மான வட்டம், குண்டடம், கன்னிவாடி, கொளத்துப்பாளையம், முலனுர் ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக செவ்வாயன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது. இதன்படி, கொளத்துப்பாளையம் துணை மின்நிலை யத்திற்குட்பட்ட உப்புத்துறைபாளையம், கொளிஞ்சிவாடி, மீனாட்சிபுரம், துலுக்கனுர், ஆச்சியூர், ரெட்டாரவலசு, மணக்கடவு, கரையூர், சாலக்கடை, எலுகாம்வலசு, காளி பாளையம், மேட்டுவலசு, ராமமுர்த்திநகர், கொளத்துப் பாளையம், ராமபட்டிணம், நகர பகுதிகளான மாரியம்மன் கோவில், அனுமந்தாபுரம், சின்னக்கடைவீதி பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது. இதேபோல், குண்டடம் துணை மின் நிலையத்திற்குட் பட்ட சூரியநல்லுர், ராசிபாளையம், எஸ்.கே.பாளையம், புதுப்பாளையம், குள்ளக்காளிபாளையம், கோனாபுரம், வெங்கிக்கல்பாளையம், ஜோதியம்பட்டி, வேங்கிபாளை யம், சேடபாளையம், நவக்கொம்பு, குண்டடம், ருத்ராவதி, எடையப்பட்டி, கொக்கம்பாளையம் பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது. முலனுர் துணை மின்நிலையத்திற்குட்பட்ட முலனுர், அக்கரைபாளையம், பொன்னிவாடி, சின்னக்காம்பட்டி, போளரை, நொச்சிகாட்டுவலசு, வெங்கிகல்பட்டி, கருப் பன்வலசு, பெரமியம், லக்கமநாயக்கன்பட்டி, வடுகபட்டி, வெள்ளவாவிபுதுர், கிளாங்குண்டல், கன்னிவாடி துணை மின்நிலையத்திற்குட்பட்ட கன்னிவாடி, மாலமேடு, அரிக்காரன்வலசு, ஆயிக்கவுண்டன்பாளையம், நஞ்சத் தலையூர், புஞ்சைதலையூர், மணலுர், பெருமாள்வலசு ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என அவர் தெரிவித்துள்ளார்.