அவிநாசி, ஏப். 11-அவிநாசி அருகே கருக்கன்காட்டுப்புதூரில் தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சேலத்தில் இருந்து ஈரோடுநோக்கி சென்ற வேனை நிறுத்தி சோதனைமேற்கொண்டனர். இதில் உரிய ஆவணங்களின்றி கொண்டு சென்ற ரூ.80 ஆயிரம் மதிப்பிலான 55 அரிசி மூட்டைகள், பாத்திரங்கள் உள்ளிட்டவைகளை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து அவிநாசிவட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.