tamilnadu

img

வெறிச்சோடிய சாலையில் மயில் நடமாட்டம்

அவிநாசி, மார்ச் 23- கொரோனா ஊரடங்கைத் தொடர்ந்து சாலையில் போக்குவரத்தின்றி வெறிச்சோடி காணப்பட்டதால் அவி நாசி பகுதியில் மயில் நடமாட்டம் அதிகம் காணப்பட்டது.  கொரோனே  வைரஸ் உலகம் முழுவதும் பரவி சுமார்  10 ஆயிரம் மரணமடைந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதைத் தடுக்கின்ற வகையில் மார்ச் 22ஆம் தேதி ஊரடங்கு உத்தரவு விடுக்கப்பட்டது. இதைய டுத்து நாடு   முழுவதும் அரசு பேருந்துகள், மளிகைக் கடை கள், தினசரி மார்க்கெட் மற்றும் திருமணம் உள்ளிட்ட நிகழ்வு கள் ஒத்தி வைக்கப்பட்டன. இந்நிலையில், அவிநாசி - மேட்டுப்பாளையம் செல்லும் சாலையும் பிற பகுதிகளைப் போலவே ஞாயிறன்று வெறிச் சோடி காணப்பட்டது. இதனையறிந்த மயில்கள் அச்சாலை யில் நடமாடியது.  இதற்கிடையில், ஊரடங்கு உத்தரவைக் கருத்தில் கொள் ளாமல் திருப்பூர் செல்லும் சாலையில் இரு சக்கர வாகனம் ஷோரூம் திறக்கப்பட்டது. அதேபோல அவிநாசி, வெள்ளி யம்பாளையம், கருவலூர் உள்ளிட்ட பகுதியில் இறைச்சிக் கடைகள் வழக்கம்போல் செயல்பட்டன. அவிநாசி வ.உ.சி வீதியிலுள்ள விளையாட்டு மைதானத்தில் ஐந்துக்கும் மேற்பட்டோர் பேட்மிட்டன் விளையாடிக்கொண்டு இருந்த னர்.