திருப்பூர், ஜன. 5- திருப்பூர் அருகே அனுப்பர்பா ளையம் பகுதியில் குடி தண்ணீர் வேண்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் மனிதச் சங்கிலி போராட்டத்திற் காகத் திரண்டனர். திருப்பூர் முதலாவது திட்ட குடிநீர் இன்றி பெரியார் காலனி, டிடிபி மில், அனுப்பர்பாளையம், அனுப்பர்பாளையம் புதூர் உள் ளிட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் ஒரு மாத காலத் திற்கு மேலாக தவித்து வருகின்ற னர். இதனால் பொதுமக்கள் அத்தி யாவசியத் தேவைகளுக்குக் கூட தண்ணீரின்றி அவதிப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் குடி தண்ணீரை விலை கொடுத்து வாங்கும் அவல நிலை உருவாகி யுள்ளது. இந்நிலையில், குடிநீர் வேண்டி பல்வேறு கட்ட போராட் டங்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரும் பொதுமக்களும் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இருப்பினும் குடிநீர் வடிகால் வாரியம் பொது மக்களின் குடிநீர் தேவையைக் கருத்தில் கொள்ளாமல் அலட்சி யம் காட்டி வருகின்றனர். இந் நிலையில், உடனடியாக போர்க் கால அடிப்படையில் குடிதண் ணீர் வழங்க கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகர செயலாளர் வி.பி.சுப்பிரமணி தலைமையில் ஞாயிறன்று மாலை மனித சங்கிலி போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப் பட்டது. திட்டமிட்டபடி அனுப் பர்பாளையம் பெரியார் கால னியில் ஞாயிறன்று மாலை அனைத்துக் கட்சியினரும் மனி தசங்கிலி போராட்டத்திற்காகத் திரண்டனர். இந்நிலையில் மாநகராட்சி ஆணையாளர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரை பேச்சுவார்த்தைக்கு அழைத்தார். சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரங்கராஜ் உள் ளிட்டோர் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர். அப்போது வெள்ளிக்கிழமை முதல் சீரான குடிநீர் விநியோகிக்கப்படும் என உதவி ஆணையாளர் உறுதிய ளித்தார். இதனையடுத்து போராட்டத் திற்காக திரண்டிருந்தவர்களிடம் மாநகராட்சி நிர்வாகத்தின் உறுதிமொழி விளக்கப்பட்டது. உறுதி மொழியையேற்று அனை வரும் கலைந்து சென்றனர்.